Asianet News TamilAsianet News Tamil

மத்திய அமைச்சரை அழைத்து வந்து அசிங்கப்படுத்திய அதிகாரிகள்… அரசு விழாவில் மக்கள் கூட்டமே இல்லாததால் அதிர்ச்சி ….

வேதாரண்யம் அருகே மக்கள் கூட்டம் இல்லாததால் அரசு விழா மேடையில் உட்கார மறுத்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிகாரிகள் மக்களை அழைத்துவந்தத பின்னர்தான் மேடையேறி பேசினார். இதற்காக காலை 11 மணியில் இருந்து பிற்பகல் 1 மணி வரை அவர் காத்திருந்தார்.

pon radahkrishnan  function vedaranyam
Author
Nagapattinam, First Published Oct 26, 2018, 7:57 PM IST

வேதாரண்யம் அடுத்த ஆதனூர் கிராமத்தில் இன்று மேம்படுத்தப்பட்ட துணை சுகாதார மையம் மற்றும் நலவாழ்வு மையம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதனை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

இந்த விழாவுக்காக அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு அவர் அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு பொதுமக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதை கண்ட அமைச்சர்  மேடையில் ஏறாமல் பார்வையாளர் வரிசையில் அரசு அதிகாரிகளோடு அமர்ந்து கொண்டார்.
pon radahkrishnan  function vedaranyam
அப்போது அரசு விழாவிற்கு பொதுமக்களை அழைக்காமல் விழா நடத்துவது குறித்து அதிகாரிகளிடம் கூறி வேதனைப்பட்டார். பிறகு அதிகாரிகளிடம் விழாவிற்கு பொதுமக்கள் வந்தால் பேசுகிறேன். இல்லை என்றால் உடனே கிளம்பி விடுவேன் என்று கடுமையாக கூறிவிட்டார்.
pon radahkrishnan  function vedaranyam
இதையடுத்து அரசு அதிகாரிகள், கிராமத்திற்கு சென்று மக்களை திரட்டி வர நடவடிக்கை எடுத்தனர். வேன், கார்களில் சென்று கிராம மக்கள் திரட் வந்தனர்.

காலை 11 மணிக்கு சுகாதார மையம் திறப்பு விழாவுக்கு வந்த மத்திய அமைச்சர்  தொடர்ந்து பொதுமக்கள் வருகைக்காக மேடை ஏறாமல் பார்வையாளர்கள் வரிசையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
pon radahkrishnan  function vedaranyam
இதையடுத்து  அதிகாரிகள், 100-க்கும் மேற்பட்ட கிராம மக்களை அழைத்து வந்தனர். இதையடுத்து சமரசமான அமைச்சர்  பொன்.ராதாகிருஷ்ணன் மதியம் 1 மணிக்கு மேடையில் ஏறி பேசிவிட்டு சென்றார்.

Follow Us:
Download App:
  • android
  • ios