Asianet News TamilAsianet News Tamil

அரசியலாக்கப்படும் பொள்ளாச்சி விவகாரம்... புகுந்து விளையாடும் திமுக..!

பொள்ளாச்சி விஷயம் ஒரு பக்கம் மக்களை சூடேற்றி கொண்டிருக்க, மற்றொரு பக்கம் இதே விவகாரத்தை வைத்து திமுக அரசியலாக்கி ஆதாயம் தேட முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. 

Politicians pollachi affair ... induction DMK ..!
Author
Tamil Nadu, First Published Mar 12, 2019, 6:25 PM IST

பொள்ளாச்சி விஷயம் ஒரு பக்கம் மக்களை சூடேற்றி கொண்டிருக்க, மற்றொரு பக்கம் இதே விவகாரத்தை வைத்து திமுக அரசியலாக்கி ஆதாயம் தேட முயல்வதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன

Politicians pollachi affair ... induction DMK ..!

பொள்ளாச்சி பாலியல் வீடியோ விவகார வழக்கு தொடுக்கப்பட்டுப் ஒரு மாத காலங்களாகிறது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாள் அதே விவகாரத்தை பூதாகரமாக்கி போராட்டங்களில் குதிக்க ஆரம்பித்துள்ளன எதிர்கட்சிகள். இந்த விவகாரத்தில் தங்களுக்கும் தங்களைச் சார்ந்தவர்களுக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை தெரிவித்த அதிமுகவை சேர்ந்த பொள்ளாச்சி ஜெயராமன், இந்த விவகாரத்தை மு.கஸ்டாலின் மருமகன் பெரிதாக்கி வருவதாக குற்றம் சாட்டி இருந்தார். Politicians pollachi affair ... induction DMK ..!

அதிமுகவுக்கு தொடர்பில்லை என பாலியல் வீடியோ விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த ஆடியோவில், எனக்கு நடந்த கொடுமைகளை பொள்ளாச்சி ஜெயராமன் மூலம் கூறினேன். அவர் தான் மாவட்ட எஸ்.பி, டிஎஸ்பி ஆகியோரிடம அழைத்துச் என்று நடவடிக்கை எடுக்க உதவினார். இந்த விவகாரத்தை அரசியலாக்கி எதிர்கட்சிகள் எனது எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விட்டன. இதனால் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துக்கு தள்ளப்பட்டுள்ளேன். என்னை பாலியல் வீடியோ எடுத்தவர்களை விட இந்த விவகாரத்தை அரசியலாக்கி வருபவர்கள் கொடூரமானவர்கள். ஆகையால் அவதூறு பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்’’ என்ன அந்தப்பெண் கேட்டுக் கொண்டுள்ளார். Politicians pollachi affair ... induction DMK ..!

அதேவேளை இந்த விவகார வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பே மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். அத்தோடு இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற காவல்துறை உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து சில மணி நேரங்களிலேயே அந்த வழக்கை சிபிஐக்கு அதிரடியாக மாற்றி உத்தரவிட்டது தமிழக அரசு. தாங்கள் சம்பந்தப்பட்டிருந்தால் சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு பரிந்துரைக்க முன் வருமா? என்பதை யோசிக்க வேண்டும் என பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

 Politicians pollachi affair ... induction DMK ..!

இந்த வழக்கில் என்ன செய்ய வேண்டுமோ அதை மிகத்துரிதமாக தமிழக அரசும் காவல்துறையும் செய்து வருகிறது. இந்நிலையில் பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாணவர் அமைப்புகளையும் பின்னிருந்து தூண்டி விடுகின்றனர். பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை கண்டித்து அங்கு சென்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகிறார் கனிமொழி. காவல்துறை அனுமதி கொடுத்தும் தடையை மீறி திமுக தலைமையில் மதிமுக., விசிக., உள்ளிட்ட தோழமை கட்சிகளை அழைத்துக் கொண்டு போராட்டம் நடத்துகிறார். அவர் யாருக்கு எதிராக, எதை வேண்டி போராட்டத்தில் ஈடுபடுகிறார் என்பது தெரியவில்லை. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios