Asianet News TamilAsianet News Tamil

தகுதியில்லாத ஸ்டாலின் ராமதாஸுக்கு சவால் விடுவதா? முரசொலி நிலம் தொடர்பாக ஸ்டாலினை கிழித்து தொங்கவிட்ட பாமக!

வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை ராமதாஸ் அபகரிக்கப் பார்ப்பதாக அபாண்டமான புளுகியிருந்தார். அதற்கு பதிலளித்த ராமதாஸ் அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், இல்லாவிட்டால் ஸ்டாலின் விலகத் தயாரா? என்றும் வினவியிருந்தார். இன்று வரை அந்தக் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் நிரூபிக்கவும் இல்லை; அரசியலில் இருந்து விலகவும் இல்லை. 

PMK President Attacked M.K.Stalin on murasoli land
Author
Chennai, First Published Oct 20, 2019, 9:12 PM IST

கொஞ்சமும் தகுதியில்லாமல் ராமதாஸுக்கு சவால் விடுக்கிறார். ஸ்டாலின் என்றாலே பொய் என்றுதான் பொருள் என்று பாமக தலைவர் ஜி.கே. மணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பாமக தலைவர் ஜி.கே மணி வெளியிட்டுள்ள அறிக்கை:

PMK President Attacked M.K.Stalin on murasoli land
முரசொலி நிலம் பஞ்சமி நிலம் இல்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 1985-ம் ஆண்டில் பெறப்பட்ட பட்டா ஒன்றை வெளியிட்டார். 1960-களில் பின்னாளில் கட்டப்பட்ட முரசொலி கட்டிடம் அமைந்துள்ள நிலம் பஞ்சமி நிலம் இல்லையென்றால் அதற்கான மூலப் பத்திரத்தையும், பதிவு ஆவணங்களையும் தானே வெளியிட வேண்டும் என்று ராமதாஸ் எதிர்வினா எழுப்பியிருந்தார்.
அதன் பிறகும் மூல ஆவணங்களை வெளியிடவில்லை. மாறாக, அரசியலில் இருந்து ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விலக ஒப்புக்கொண்டால் மூல ஆவணத்தைக் காட்டுவதாக ஸ்டாலின் கூறியிருக்கிறார். ராமதாஸின் வினாக்களுக்கு விடையளிக்க அஞ்சி ஓடுவதிலிருந்தே அவரது நேர்மை வெளிப்படுகிறது.

PMK President Attacked M.K.Stalin on murasoli land
ஏப்ரல் 10ம் தேதி அரக்கோணத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், அந்த நாளுக்கு ஏற்ற வகையில் சில குற்றச்சாட்டுகளை ராமதாஸ் மீது முன்வைத்தார். வன்னியர் அறக்கட்டளை சொத்துகளை ராமதாஸ் அபகரிக்கப் பார்ப்பதாக அபாண்டமான புளுகியிருந்தார். அதற்கு பதிலளித்த ராமதாஸ் அந்தக் குற்றச்சாட்டை நிரூபித்துவிட்டால் அரசியலில் இருந்து விலகுவதாகவும், இல்லாவிட்டால் ஸ்டாலின் விலகத் தயாரா? என்றும் வினவியிருந்தார்.
இன்று வரை அந்தக் குற்றச்சாட்டை மு.க.ஸ்டாலின் நிரூபிக்கவும் இல்லை; அரசியலில் இருந்து விலகவும் இல்லை. அந்த அளவுக்கு யோக்கியமான மனிதர்தான், கொஞ்சமும் தகுதியில்லாமல் ராமதாஸுக்கு சவால் விடுக்கிறார். ஸ்டாலின் என்றாலே பொய் என்றுதான் பொருள். வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்தில் கட்டவிழ்த்து விட்ட பொய்க்குற்றச்சாட்டுகளுக்கு பொறுப்பேற்று இதுவரை ஸ்டாலின் பதவி விலகாதது ஏன்?PMK President Attacked M.K.Stalin on murasoli land
முதலில் வன்னியர் கல்வி அறக்கட்டளை விவகாரத்தில் பதவி விலகி விட்டு, அதன்பிறகு ராமதாஸ் குறித்தும், அன்புமணி ராமதாஸ் குறித்தும் பேசுவதுதான் நேர்மையான அரசியலாக இருக்கும். அதை செய்யாமல் நேர்மை அரசியல் குறித்து ஸ்டாலின் பேசுவது கேலிக்கூத்துதான்.மக்களவைத் தேர்தலிலும், சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்றால் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றி பெற்ற ஸ்டாலின் இன்று வரை நகைக்கடனை தள்ளுபடி செய்யாதது ஏன்? வேளாண் கடனையும், கல்விக்கடனையும் தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதிகள் என்னவாயின?
எட்டு வழி சாலைத் திட்டத்தையும், நீட் தேர்வையும் ரத்து செய்வதாகக் கூறி வெற்றி பெற்ற ஸ்டாலின், இப்போது அந்தப் பிரச்னைகள் குறித்து பேசக்கூட முன்வராதது ஏன்? இப்படியாக முரண்பாடுகள் மற்றும் மோசடிகளின் மொத்த உருவமாகத் திகழும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு ராமதாஸ் குறித்தும், அன்புமணி ராமதாஸ் குறித்தும் பேச எந்தத் தகுதியும் கிடையாது.PMK President Attacked M.K.Stalin on murasoli land
மீண்டும்... மீண்டும் நான் கூறுகிறேன்.... முரசொலி நிலம் தொடர்பான 1924-ம் ஆண்டின் UDR மூல ஆவணம் முதல் 1960-களில் முரசொலி நிலம் வாங்கப்பட்டதற்கான நிலப்பதிவு ஆவணம் வரை அனைத்தையும் மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும். அரசு ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி அமைந்திருந்த நிலம் எப்படி, எவ்வளவு தொகைக்கு முரசொலிக்கு மாறியது என்பதை அவர் விளக்க வேண்டும். 
இவற்றைக் கடந்து அரசியலில் நேர்மை என்பது சிறிதளவாவது இருந்தால் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி மாவட்டத் தலைநகரங்களில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகங்கள் வரை ஒவ்வொன்றும் யார் யாருக்கு சொந்தமான, எவ்வளவு நிலங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து வெளிப்படையான விசாரணையை அரசு நடத்த ஆணையிடக் கோரி எதிர்கொள்ள வேண்டும். ஸ்டாலின் செய்வாரா?
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios