Asianet News TamilAsianet News Tamil

ரகசிய தகவல்கள் என்பதே இனி இருக்காது !! சிபிஐ கண்கள் உங்க பின்னாடியே சுத்தி சுத்தி வரும்…. மத்திய அரசு அதிரடி …

இந்தியாவில் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களையும் கண்காணிக்க சி.பி.. உள்பட 10 அமைப்புகளுக்கு அனுமதி வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் பிரைவஸி பாதிக்கப்படும் என எதிர்கட்சிகள் மட்டுமல்லாமல் பொது மக்களும் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

peroanal compeuters are monitered by cbi
Author
Delhi, First Published Dec 22, 2018, 6:14 AM IST

இந்தியா கிட்டதட்ட 100 சதவீதம் கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது.  சிறு வணிக நிறுவனங்கள், கடைகள் முதல் கொண்டு தற்போது கம்ப்யூட்டர்களை பயன்படுத்தி வருகின்றன. பொது மக்கள் பெரும்பாலும் வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக கம்ப்யூட்டர் உபயோகப்படுத்தி வருகின்றனர்.

இந்த  கம்ப்யூட்டர்  யுகத்தில் . தனிநபர்களாலும், அலுவலகங்களாலும், நிறுவனங்களாலும் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. தகவல் பரிமாற்றத்தில், தகவல் தொழில் நுட்பத்தில், கம்ப்யூட்டர்கள் மிக முக்கிய பங்குகள் வகிக்கின்றன.

peroanal compeuters are monitered by cbi

இந்த கம்ப்யூட்டர்கள், பயங்கரவாதிகளுக்கும் பக்க பலமாக அமைந்துள்ளன. பயங்கரவாத இயக்கங்கள் பலவும் தங்கள் இயக்கத்துக்கு ஆதரவு திரட்டவும், தகவல் பரிமாறிக்கொள்ளவும், இளைஞர்களை மூளைச்சலவை செய்யவும் கம்ப்யூட்டர் தகவல் தொழில் நுட்பத்தையும், இணைய தளங்களையும், சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்துகின்றன.
peroanal compeuters are monitered by cbi
அந்த வகையில் எந்த அளவுக்கு கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தப்படுகிறதோ, அதே அளவுக்கு நாச வேலைகளுக்கும் பக்க பலமாக உள்ளது.

இந்த நிலையில் நாட்டில் உள்ள எந்தவொரு கம்ப்யூட்டர் டேட்டாக்களை  கண்காணிக்கவும், கண்டறியவும், வேவு பார்க்கவும் 10 மத்திய அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இது குறித்த ‘கெசட்’ அறிவிப்பை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் கம்ப்யூட்டர் குற்றம், தகவல் பாதுகாப்பு பிரிவுக்காக மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் காபா வெளியிட்டுள்ளார்.

இந்த ‘கெசட்’ அறிவிப்பின்படி கம்ப்யூட்டர்களை உளவு பார்க்கும் அதிகாரம் பெற்றுள்ள 10 அமைப்புகளின் விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1. உளவு அமைப்பு (ஐ.பி.)

2. போதைப்பொருள் தடுப்பு அமைப்பு

3. அமலாக்க இயக்குனரகம்

4. மத்திய நேரடி வரிகள் வாரியம்.

5. வருவாய் புலனாய்வு இயக்குனரகம்

6. சி.பி.ஐ.

7.தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.)

8. மத்திய மந்திரிசபை செயலகத்தின் கீழ் செயல்படும் ‘ரா’ உளவுப்பிரிவு

9. காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள், அசாமில் செயல்படுகிற சமிக்ஞை புலனாய்வு அமைப்பு

10.டெல்லி போலீஸ் கமிஷனர்.

peroanal compeuters are monitered by cbi
இந்த 10 அமைப்புகளுக்கு 2000-ம் ஆண்டு இயற்றப்பட்ட தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் பிரிவு 69-ன் கீழ் கம்ப்யூட்டர்களை வேவு பார்க்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிகாரத்தின் கீழ் கம்ப்யூட்டரில் அனுப்பப்படுகிற தகவல்களை (இ-மெயில்கள், சமூக வலைத்தள பதிவுகள் உள்ளிட்டவை) இடைமறிக்க முடியும்.

தகவல்களைக் கண்டறிய முடியும். சேமிக்கப்பட்டுள்ள தகவல்களை பகுப்பாய்வு செய்ய முடியும். இத்தனை அதிகாரங்களும் 10 அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
கம்ப்யூட்டர்களை உளவு பார்க்க 10 அமைப்புகளுக்கு மத்திய அரசு இப்போது அதிகாரம் வழங்கி பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios