Asianet News TamilAsianet News Tamil

தெரு தெருவாக வாக்கு சேகரிக்கும் ஒபிஎஸ் - இபிஎஸ் ; படு குஷியில் மதுசூதனன்...!

panneerselvam and edappadi get voters for mathusoothanan
panneerselvam and edappadi get voters for mathusoothanan
Author
First Published Dec 10, 2017, 9:44 PM IST


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்து பிரசாரம் செய்து வருகின்றனர். 

மதுசூதனனுக்கு ஆதரவாக கொருக்குப்பேட்டையில் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவையடுத்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் கடந்த ஏப்ரல் மாதம் இடைத் தேர்தலை  அறிவித்தது. அதிமுக இரண்டாக உடைந்தது.  ஓபிஎஸ் தலைமையில் பிரிந்து சென்ற அணி சார்பில் மதுசூதனன் வேட்பாளராக போட்டியிட்டார்.

அதிமுக அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரன் போட்டியிட்டார். இரு அணிகளும் போட்டியிட்ட அந்த தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்கு வரலாறு காணாத அளவுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து இடைத் தேர்தல் ரத்துசெய்யப்பட்டது.

தற்போது 7 மாதங்களுக்கு பிறகு அங்கு மீண்டும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் –ஓபிஎஸ் அணிகள் இணைந்ததையடுத்து அவர்களுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மதுசூதனனே மீண்டும் அந்த அணி சார்பில் களத்தில் இறங்கியுள்ளார்.

டி.டி.வி.தினகரன் குக்கர் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிடுகிறார். திமுக சார்பில் கடந்த முறை வேட்பாளராக இறங்கிய மருதுகணேஷே இந்த முறையும் களமிறங்குகிறார். 

அதிமுக இரட்டை இலை சின்னத்திலும் திமுக உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகிறது. ஆனால் டிடிவி தினகரன் கடந்த முறை தொப்பி சின்னத்தில் போட்டியிட்டார். இந்த முறை பதிவு செய்யப்பட்ட கட்சிகள் தொப்பி சின்னத்தை பறிக்கவே தற்போது பிரஷர் குக்கர் சின்னத்தில் போட்டியிடுகிறார். 

மூன்று தரப்பும் எப்படியாவது ஆர்.கே.நகரை கைப்பற்றிவிட வேண்டும் என தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். 

அந்த வகையில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் இணைந்து பிரசாரம் செய்து வருகின்றனர். 

மதுசூதனனுக்கு ஆதரவாக கொருக்குப்பேட்டையில் வீதி வீதியாக வாக்கு சேகரித்து வருகின்றனர்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios