Asianet News TamilAsianet News Tamil

தேனியை தெறிக்கவிடும் ஓபிஆர் !! ஒபிஎஸ் மகனுக்கு சொந்த ஊரில் எம்.பி.சீட்டு கேட்டு 20 பேர் விருப்பமனு...

தேனி பாராளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் போட்டி போட வேண்டும் என 20-க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

OPS supporters request application for OPS Son Ravindranath
Author
Chennai, First Published Feb 9, 2019, 11:42 AM IST

பாராளுமன்றத் தேர்தல் வரை இருப்பதையொட்டி தமிழகத்தில் முதன்முதலில் ஆளும்கட்சியான அதிமுகதான் பாராளுமன்ற தேர்தலில் போட்டி போடுபவர்கள் விருப்பமனு கொடுக்கலாம் என அறிவித்தது. அதைத்தொடர்ந்து கடந்த 4ம் தேதி முதல் வருகிற 10ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகள் ஒரு தொகுதி பாண்டிச்சேரி உட்பட மொத்தம் 40 தொகுதிகளில் போட்டியிட அதிமுகவினர்  தலைமை அலுவலகத்தில் கொடுக்கலாம் என அறிவித்திருந்தது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான அதிமுக விருப்பமனு விநியோகம் கடந்த 4 ஆம் தேதி தொடங்கியது. நாளை 10-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கவுள்ளதுவிநியோகம் செய்யவுள்ளனர். விண்ணப்பக் கட்டணத் தொகையாக ரூ.25  ஆயிரம் ரூபாய் என வாங்கி வருகின்றனர்.

OPS supporters request application for OPS Son Ravindranath

அது தொடர்ந்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய கட்சிப் பொறுப்பாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு சீட் கேட்டு விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். அதுபோல ஓபிஎஸ்  சொந்த மாவட்டமான தேனி பாராளுமன்ற தொகுதிக்கு ஓபிஎஸ் மகன்  ரவீந்திர நாத்தும் சீட்டு கேட்டு  விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். அதுபோல் தேனி பாராளுமன்ற தொகுதியில் ஓபிஎஸ் மகனான ரவீந்திரநாத் போட்டி போட வேண்டும் என 20-க்கும் மேற்பட்ட ஓபிஎஸ் தீவிர ஆதரவாளர்கள் விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார்களாம்.  

OPS supporters request application for OPS Son Ravindranath

கடந்த சில வருடங்களாகவே ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத் தீவிர அரசியலில் ஈடுபட்டு வந்ததால்,  இதனைத் தொடர்ந்து மகனை டெல்லிக்கு அனுப்பும் முயற்சியில் ஓபிஎஸ் அரசியல் காலத்தில் இறக்கினார். இதற்காக மாவட்ட ஜெ பேரவை  செயலாளர் பதவியை ரவீந்திர நாத்துக்கு வழங்கினார்கள். இதனைத் தொடர்ந்து அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு கட்சிப் பணி ஆற்றி மக்கள் மத்தியில் நல்ல பெயர் எடுத்தால் போதும். தாம் சிபாரிசு செய்யவேண்டிய அவசியம் இல்லை, கட்சியே ரவீந்திரநாத் சீட்  கொடுக்கும் என்பதால். தொடர்ந்து  கட்சிப்பணியில் ஈடுபடுத்தி வருகிறார்.  வரும் பாராளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத்துக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார்களாம் அவரது ஆதரவாளர்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios