Asianet News TamilAsianet News Tamil

ஓபிஎஸ்சின் நல்ல மனசப் பாருங்க!! தந்தை, தாயைப் பராமரிக்க முடியாத சிறுமிக்கு உதவி …

தேனி அருகே நடக்க முடியாத தந்தை, மனநலம் பாதிக்கப்பட்ட தாய் ஆகியோரை பராமரிக்க கூலி வேலைக்குச் சென்ற  13 வயது சிறுமிக்கு வீடு கட்டிக் கொடுத்து அந்த குடும்பத்தின பராமரிப்புச் செலவுகளையும் துணை முதலமைச்சர் ஏற்றுள்ளார், இதற்காக அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

ops help a poor family
Author
Theni, First Published Jan 17, 2019, 2:15 PM IST

தேனி மாவட்டம் சங்கரலிங்கபுரத்தை சேர்ந்தவர் சந்திர சேகர். இவரது மனைவி மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு அனிதா என்ற 13 வயது மகள் உள்ளார். அருகில் உள்ள பள்ளியில் அவர் படித்துக் கொண்டிருந்தார்.

 

இந்நிலையில் சந்திரசேகருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பக்கவாதத்தால் பாதிக்கப்ப்ட்டார். அவரால் எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. மகிழ்ச்சியோடு பள்ளி சென்று கொண்டிருந்த  அனிதாவின் தலையில் இது இடியாக இறங்கியது.

ops help a poor family

என்ன செய்வதென்று அந்த சிறுமி தவித்துப் போனார். தனது தலைவிதியை நொந்து கொண்ட அனிதா  பள்ளி செல்வதை நிறுத்தினார். நடக்க முடியாத தந்தையையும், தாயையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அந்த சிறுமியின் தலையில் விழுந்தது. இதைத் தொடர்ந்து அவர் கூலி வேலைக்கு போகத் தொடங்கினார்.

ops help a poor family

 இந்த சிறுமி குறித்த செய்தி  தனியார் தொலைக்காட்சியில் செய்தி ஒளிபரப்பானது. இதைப் பார்த்த பலரும் அனிதாவை சந்தித்து உதவிகள் செய்தனர். அப்போதுதான்  இந்தச் செய்தி துணை முதலமைச்சர் ஓபிஎஸ்  கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட சந்திரசேகர் மற்றும் அவரது மகள் அனிதாவை நேரில் சந்தித்து தேவையான உதவிகளை வழங்குமாறு தனது உதவியாளர்களுக்கு ஓபிஎஸ் உத்திரவிட்டார்.

 ops help a poor family

 

இதையடுத்து சந்திரசேகருக்கு போர்வை, தலையணைகளை வழங்கியதோடு, முதல் கட்டமாக 25 ஆயிரம் ரூபாய் உதவித் தொகையையும் ஓபிஎஸ்  வழங்கினார். மேலும் சந்திரசேகரின் வீட்டினை இடித்து நவீன கழிப்பறை வசதியுடன் கூடிய புதிய வீட்டினை ஓபிஎஸ் கட்டிக் கொடுத்துள்ளார்.

 

அது மட்டுமல்லாமல்   அனிதாவின் குடும்ப செலவிற்கு மாதந்தோறும் 3000 ரூபாயினை அவரது வங்கி கணக்கில் அளிக்க உள்ளதாகவும், அனிதாவின் படிப்பு செலவு மட்டுமின்றி அவரின் திருமண செலவுகள் வரை அனைத்தையும் தான் ஏற்று கொள்வதாகவும் துணை முதலமைச்சர்  ஓபிஎஸ் உறுதி அளித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios