Asianet News TamilAsianet News Tamil

பாஜகவுக்கு ஆப்பு வைக்கும் மெகா கூட்டணி … டெல்லியைக் கலக்கப் போகும் எதிர்கட்சிகள் கூட்டம் …

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக  எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து வரும் ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு வரும் 22 ஆம் தேதி முதல் கூட்டத்தை டெல்லியில் நடத்த உள்ளார். இதில் அனைக்குக்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது,

opp parties meeting in delhi on 22ed october
Author
Delhi, First Published Nov 11, 2018, 8:47 AM IST

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை எனக்கூறி பாஜக கூட்டணியில் இருந்து ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு விலகினார்.  இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து மிகப்பெரிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டு வருகிறார்.

opp parties meeting in delhi on 22ed october

அதன்படி அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக்அப்துல்லா, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் ஆகியோரையும் சந்தித்தார்.

opp parties meeting in delhi on 22ed october

மேலும், பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மிதலைவர் கெஜ்ரிவால், சரத்யாதவ், முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் தலைவருமான தேவே கவுடா, கர்நாடக முதலமைச்சர்  குமாரசாமி மற்றும் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு கூட்டம் நடத்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். அதன்படி, இந்த அனைத்துக்கட்சிகளின் கூட்டம் வரும் 22-ம் தேதி டெல்லியில் உள்ள ஆந்திரப்பிரதேசம் பவனில் நடக்கவுள்ளது.

இந்த கூட்டத்தில அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். ஏற்கனவே திமுக தலைவர் ஸ்டாலின் இதில் கலந்து கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார்.

opp parties meeting in delhi on 22ed october

இதே போன்று ராகுல் காந்தி, மாயாவதி, அகிலேஷ் யாதவ், சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அந்த கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர், கூட்டணி, சீட் ஷேரிங் உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.

எதிர்கட்சிகளின் இந்த மெகா கூட்டணி பிளான் பாஜகவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தும் என்று சந்திரபாவு நாயுடு தெரிவித்துள்ளார்,

Follow Us:
Download App:
  • android
  • ios