Asianet News TamilAsianet News Tamil

உச்சநீதிமன்றம் இப்ப சொன்னத பஞ்சாங்கம் அப்பவே சொல்லிருச்சு…. என்னன்னுதான் பாருங்களேன் !!

இந்தியா முழுவதும் தீபாவளியின்போது பட்டாசு வெடிப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில் இந்த ஆண்டு பெரும்பாலும் வெடி இல்லாத தீபாவளியாகத் தான் இருக்கும் என எதிபார்க்கப்டுகிறது. தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க முடிக்கும் என்ற நிலையில் இதை பஞ்சாங்கம் அன்றே கணித்து சொல்லி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

no crakers in india at the time if giwali
Author
Chennai, First Published Nov 1, 2018, 12:38 PM IST

தீபாவளியின்போது இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து பட்டாசு வெடிப்பது தொடர்பான உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

no crakers in india at the time if giwali

அதில் பட்டாசு வெடிக்க 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டதை மாற்றி, காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டது. இதனைத்  விசாரித்த உச்சநீதிமன்றம்  தமிழகத்தில் மட்டும் அதிகாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரை பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கி உள்ளது. அதே சமயம் நாடு முழுவதிலும் மொத்தம் 2 மணிநேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்படும் என்று திட்டவட்டமாக கூறியிருந்தது. மேலும், தமிழகத்துக்கு ஏற்ற நேரத்தை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அது காலையோ அல்லது மாலையோ நீங்களே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தது. 

இந்த நிலையில், தீபாவளி அன்று தமிழகத்தில் காலை 4 மணி முதல் 5 மணி வரையும், இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

no crakers in india at the time if giwali

உச்சநீதிமன்றத்தின் விதிகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை மாவட்ட ஆட்சியர்கள் முதல் வி.ஏ.ஓ. உள்ளிட்டோர் கண்காணிக்க வேண்டும் என்றும், விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

no crakers in india at the time if giwali

இதனால் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடும் பொது மக்கள் குறிப்பாக வாண்டுகள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த ஆண்டு பட்டாசு இல்லாத தீபாவளி தான் என்றும் கருதப்படுகிறது. இந்நிலையில் உச்சநீதிமன்றம் தற்போது போட்ட உத்தரவு ஏற்கனவே பஞ்சாங்கத்தல் கூறப்பட்டிருப்பது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

no crakers in india at the time if giwali

அந்த பஞ்சாங்கத்தில் நாட்டில் பல பகுதிகளில் வெடி இல்லா தீபாவளியாக அமலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னையில் மழை வெள்ளம், மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீ விபத்து என பல நிகழ்வுகள் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டு அது நடந்தது என்பது அனைவரும் அறிந்ததே.

Follow Us:
Download App:
  • android
  • ios