Asianet News TamilAsianet News Tamil

அமராவதியில் புதிய திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவில் !! அடிக்கல் நாட்டினார் சந்திரபாபு நாயுடு !!

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் வெங்கடேசப் பெருமாள் திருக்கோவில் கட்டப்பட்டு வரும் நிலையில் ஆந்திர மாநில புதிய தலைநகர் அமராவதியில் திருப்பதி கோவில்  கட்ட முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அடிக்கல் நாட்டினார்.

new thiruppati temple in amaravatji
Author
Amaravathi, First Published Feb 1, 2019, 8:11 PM IST

திருப்பதி வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் சார்பில் நாட்டின் முக்கிய நகரங்களில் வேங்கடேசப் பெருமாள் திருக்கோயில்கள் கட்டப்பட்டு வருகின்றன. 
அண்மையில் கன்னியாகுமரியில் கட்டப்பட்ட திருப்பதி கோவில் பிரதிஷ்டை பண்ணப்பட்டது. இங்கு தற்போது ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.


இந்நிலையில் ஆந்திராவின்  புதிய தலைநகரான அமராவதியில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோயில் ஒன்று பிரமாண்டமாக  25 ஏக்கர் நிலப்பரப்பில் 150 கோடி ரூபாய் செலவில் கட்டப்படுகிறது. 

new thiruppati temple in amaravatji
இதற்கான பூமி பூஜை வெகுசிறப்பாக நடைபெற்றது.  இதில் ஆந்திர முதலமைச்சர்  சந்திரபாபு நாயுடு பங்கேற்று நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது , இன்னும் இரண்டு ஆண்டுகளில் வேங்கடேசப் பெருமாள் கோயில் பொதுமக்கள் பிரார்த்தனைக்குத் திறக்கப்படும் என்று தெரிவித்தார். 


இதைத் தொடர்ந்து விழாவின் ஒரு பகுதியாக சீனிவாச கல்யாணம் மகோத்ஸவமும்  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், திருப்பதி சேவகர்கள், எனப் பல்லாயிரக்கணக்கான பேர்கள் கலந்து கொண்டனர். இதைத்  திருமலை தேவஸ்தான நிர்வாக அதிகாரி அசோக் சிங்கால் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios