Asianet News TamilAsianet News Tamil

மீண்டும் மதிமுகவில் இணையும் நாஞ்சில் சம்பத்!! தொண்டர்கள் உற்சாகம்...

பேச்சாளர் நாஞ்சில் சம்பத், மீண்டும் மார்ச் மாதம் மதிமுகவில் இணைய முடிவு செய்துள்ளதாக, மதிமுக தொண்டர்கள் பழைய உற்சாகத்திற்கு திரும்பியுள்ளனர்.

Nanjil Sambath Again Re Join in MDMK
Author
Chennai, First Published Feb 20, 2019, 7:20 PM IST

மதிமுக கொள்கை பரப்பு செயலராக இருந்த பேச்சாளர், சம்பத், 2012ல், மறைந்த முன்னால் முதல்வர், ஜெயலலிதா முன்னிலையில், அதிமுகவில் இணைந்தார். அதற்கு பரிசாக ஒரு அழகிய இனோவா கார் ஒன்று கொடுத்தார்.  

ஜெயலலிதா மறைவுக்கு பின் அவரது தோழி, சசிகலா தலைமையிலும், அமமுக துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையிலும், அவர் பணியாற்றினார். டிடிவி தினகரனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விட்டு, நாஞ்சில் சம்பத் வெளியேறினார். எந்த கட்சியிலும் சேராமல், இலக்கிய கூட்டங்கள், பட்டிமன்றங்கள்,  தொலைக்காட்சி விவாதங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் பங்கேற்றார். இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலை திறக்க, உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை, நாஞ்சில் சம்பத் வரவேற்றுள்ளார். 

Nanjil Sambath Again Re Join in MDMK

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில், ஸ்டெர்லைட் தடைக்கு போராடிய வைகோவை, பிதாமகன், கதாநாயகன் என, வாழ்த்தியுள்ளார். சென்னை, தாயகத்தில், மார்ச்ல், மதிமுக, பொதுக்குழுக் கூட்டம் கூடுகிறது. 

அக்கூட்டம் நடக்கிற அன்று அல்லது மார்சில், வைகோ முன்னிலையில், மதிமுகவில், சம்பத் சேர முடிவு செய்து உள்ளார். சம்பத் ஏற்கனவே, மதிமுகவில், கொள்கை பரப்பு செயலாளர் பதவியை வகித்தவர். தற்போது அந்த பதவியில், அழகு சுந்தரம் உள்ளார். 

அதேபோல, துணைப் பொதுச் செயலாளர்களாக, மல்லை சத்யா, நாசரேத் துரை, துரை பாலகிருஷ்ணன், செஞ்சி மணி ஆகியோர் உள்ளனர். நாசரேத் துரை, துரைபாலகிருஷ்ணன் ஆகிய இருவரும், உடல்நலம் குன்றியுள்ளனர். எனவே, பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திற்கு, துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios