Asianet News TamilAsianet News Tamil

மும்பை தாக்குதல் தினம்… மறக்க முடியுமா இந்த நாளை !! வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவு கூர்ந்த பாஜக எம்.பி. ராஜீவ் சந்திரசேகர்…

நாடு முழுவதும் மும்பை தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில் 2008 நவம்பர் 26 ஆம் தேதியன்று நடைபெற்ற தாக்குதலில் மரணமடைந்த 166 அப்பாவிப் பொது மக்கள் மற்றும் தங்கள் உயிரை துச்சமென மதித்து வீர மரணம் அடைந்த ராணுவ வீர்ரர்கள் ஆகியோரை நினைவு கூர்ந்து, மறக்க முடியுமா இந்த நாளை என பாஜக எம்.பி.ராஜீவ் சந்திர சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

mumbai attack day tweet by rajeev chandrasekhar
Author
Mumbai, First Published Nov 26, 2018, 3:42 PM IST

மும்பையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26-ம் தேதி கடல் வழியாக ஊடுருவி திடீர் தாக்குதல் நடத்தினர். 29-ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட 166 பேர் உயிரிழந்தனர்.

mumbai attack day tweet by rajeev chandrasekhar

300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 9 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். உயிருடன் பிடிபட்ட பயங்கரவாதி அஜ்மல் கசாப் 2012ம் ஆண்டு தூக்கிலிடப்பட்டான்.  அதே நேரத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலை முறியடிக்கவும், அப்பாவிப் பொது மக்களைக் காப்பாற்றவும் ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென மதித்து கள்தித்ல இறங்கினர். அதில் பல ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்

mumbai attack day tweet by rajeev chandrasekhar

இந்த தாக்குதல் சம்பவத்தின் 10ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி  நாடு முழுவதும் மறைந்த பொது மக்கள் மற்றும் ராணுவ வீர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

மும்பை யில் மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதலமைச்சர்  தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

mumbai attack day tweet by rajeev chandrasekhar

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக மாநிலங்களவை உறுப்பினர் ராஜீவ் சநதிரசேகர், மும்பை தாக்குதலின் 10 ஆம் ஆண்டு நினைவு தினம்…இந்த நாளை ஒரு போதும் மறக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

mumbai attack day tweet by rajeev chandrasekhar

166 அப்பாவிப் பொது மக்கள் மரணம்… தங்கள் உயிரை துச்சமென மதித்து மக்களை காப்பாற்றிய நமது ராணுவ வீரர்களை மறக்க  முடியமா ?  என்றும், அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இதனை ரீடுவீட் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

அதே நேரத்தில் அவரது டுவீட்டுக்கு பதில் அளித்துள்ள ஸ்ரேயா ராஜ் என்பவர், வீர மரணமடைந்த ராணுவ வீர்ர்கள்  மேல் ராஜீவ் சந்திர சேகர் வைத்துள்ள அபிமானம் பாராட்டுக் குரியது என குறிப்பிட்டுள்ளார்.

mumbai attack day tweet by rajeev chandrasekhar

இந்த தாக்குதலில் வீர மரணம் அடைந்த  மேஜர் சந்தீப் உன்னி கிருஷ்ணன் என்பவரின் தந்தை அவர் நினைவாக நடத்தி வரும் அறக்கட்டளைக்கு  ராஜீவ் சந்திர சேகர் 25 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளதையும் ஸ்ரேயா ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios