Asianet News TamilAsianet News Tamil

டாக்டர் ராமதாஸையே கண்சிவக்கவைத்த முன்னால் பாமக நிர்வாகி... மண்டை காயவிட்ட தாறுமாறான கேள்விகள்!!

கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுகவா? அதிமுகவா? சிந்திப்பீர்.... என முன்னாள் பாமக நிர்வாகி மு.ஞானமூர்த்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Mu.gnanamurthy Statements against Ramadoss
Author
Chennai, First Published Feb 20, 2019, 3:26 PM IST

பாமகவில் மாநில தொழிற்சங்கத் தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்ததோடு, 1991ல் ஆண்டிமடம் தொகுதியில் பாமக சார்பில் போட்டியிட்டவர் மு.ஞானமூர்த்தி. பாமகவில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்து தற்போது அரியலூர் மாவட்டம், செந்துறை வடக்கு ஒன்றிய திமுக செயலாளராக உள்ள அவர் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்தது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

அய்யா மருத்துவர் ராமதாசே ஒருவர் செய்த நன்றியை நீங்களும், உங்கள் மகனும் மறக்கலாம் நாங்கள் மறக்க மாட்டோம். 
 
கடந்த காலங்களில் வன்னியர்களுக்கு நன்மை செய்தவர்கள் திமுகவா? அதிமுகவா? சிந்திப்பீர்....

*வன்னியர் சங்கம் இட ஒதுக்கீடு கேட்டு போராடியபோது ஆட்சியில் இருந்தவர்கள் யாருமே உங்களை அழைத்துப் பேசாத நிலையில் உங்களை அழைத்து கோரிக்கையை ஏற்று வன்னியர்களுக்கும் நம்மைப்போல் மிகவும் பின்தங்கிய 107 சாதியினருக்கும் MBC என பிரித்து 20% இடஒதுக்கீடு தந்தது திமுகவா? அதிமுகவா?

*அதிமுக ஆட்சியில் ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் வன்னியர்கள் மீது போடப்பட்ட 11ஆயிரம் வழக்குகளை தள்ளுபடி செய்தது திமுகவா? அதிமுகவா?

Mu.gnanamurthy Statements against Ramadoss

*ஒருவார சலைமறியலில் உயிர் இழந்த 24 வன்னியர்கள் குடும்பத்துக்கு 3 லட்சம் நிதியும், மாதம் 3000 பென்ஸனும் வழங்கியது திமுகவா? அதிமுகவா?

*சட்டமன்றத்தில் வன்னியர்கள் மரம் வெட்டிகள் என்று சொன்ன ஜெயலலிதாவுக்கு, இல்லை வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுப் போராளிகள் என்று அதே சட்டமன்றத்தில் முழங்கியது (கலைஞர் ) திமுகவா? அதிமுகவா?

*ஜெயலலிதா ஆட்சி காலத்தில் நீங்கள் போராட்டம் நடத்திய போது உங்களை வேலூர் சிறையில் அடைத்தாரே! அப்போது உங்கள் துணைவியார் சரஸ்வதி சென்று ஜெயலலிதாவை சந்தித்து என்கணவறை விடுதலை செய்யுங்கள் அவர் உடல் நலமில்லாமல் இருக்கிறார் என்று கேட்டதாகவும், பொதுவாழ்க்கைக்கு வருபவர்கள் இதற்கெல்லாம் தயாராக இருக்கவேண்டும் என்று சட்டமன்றத்திலேயே கிண்டல் செய்தவர் ஜெயலலிதாவா? கலைஞரா?
 
*வன்னியர் சமுதாயத் தலைவர் திரு. ராமசாமி படையாச்சியாருக்கு சென்னையில் சிலை வைத்தது திமுகவா? அதிமுகவா?

Mu.gnanamurthy Statements against Ramadoss
 
*தென்னாற்காடு மாவட்டமாக இருந்ததை இரண்டாகப் பிரித்து ஒரு மாவட்டத்திர்க்கு திரு. இராமசாமி படையாச்சியார் மாவட்டம் என பெயர்வைத்தது திமுகவா? அதிமுகவா?

*ஒருசாதிக்கு ஒரு மாவட்டமா என அரியலூர் மாவட்டத்தை எடுத்த ஜெயலலிதாவின் ஆணையை ரத்துசெய்து அரியலூரை தனி மாவட்டமாக அறிவித்தது (கலைஞர்) திமுகவா? அதிமுகவா?
 
*வன்னிய வள்ளல்களின் (செங்கல்வராய நாயக்கர் அரக்கட்டளை) சொத்துக்களை ஒருங்கிணத்து வன்னிய அரக்கட்டளை அமைத்துக்கொடுத்தது திமுகவா? அதிமுகவா?

*பிற்பட்டுத்தப்டோர் & மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என தனி இலாக்காவை துவங்கி அதற்கு ஒரு அமைச்சறையும் நியமித்து ( எம். ஆர். கே. பன்னீர்செல்வம் ) அந்தத்துறையில் முறையாக இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறதா என கண்காணித்தது திமுகவா? அதிமுகவா?
 
*மூன்று ஆண்டுகளுக்கு முன் மாமல்லபுறத்தில் நடைபெற்ற வன்னியர் இளைஞர் மாநாட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் வன்னியர்கள் மீது சுமார் 150 வழக்குகள் போட்டது திமுகவா? அதிமுகவா?
 
*மாமல்லபுரம் கலவரத்தில் சுமார் 8000 வன்னியர்கள் மீது வழக்கு போட்டது திமுகவா? அதிமுகவா?
 
*அதே சம்பவத்தில் 122 வன்னியர்களை  குண்டர் சட்டத்திலும், தேசியபாதுகாப்பு சட்டத்திலும் கைது செய்தது திமுகாவா? அதிமுகவா?

Mu.gnanamurthy Statements against Ramadoss

*அந்த விழாவே இனி மாமல்லபுரத்தில் வன்னியர்கள் நடத்தக்கூடாது என தடை விதித்தது திமுகவா? அதிமுகவா?
 
*முதன் முதலாக தேர்தலிலேயே நிற்காமல் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் தந்து மத்தியில் சுகாதாரத்துறை கேபினேட் அமைச்சர் பதவியும் வாங்கித்தந்தது திமுகவா? அதிமுகவா?

இப்படி பலவழிகளில் வன்னியர்களுக்கு உதவிய திமுகவின் பக்கம் ஒட்டுமொத்த வன்னியர்களும் நிற்கிறார்கள்.  பாமகவை வித்து விட்டீர்கள். “நன்றியை நான்மறவேன்" என பாமகவினரும் ராமதாசும் சிந்திக்கவாய்க்கும் அளவிற்கு தரமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios