Asianet News TamilAsianet News Tamil

கியூவில் நின்று பொங்கல் பரிசு வாங்கிய திமுக எம்எல்ஏவின் தந்தை !! வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவராம் !!

கோவை சிங்காநல்லூர் தொகுதி எம்எல்ஏ நா.கார்த்திக்கின் தந்தை நேற்று அங்குள்ள ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாயும், பொங்கல் பொருட்களையும் வாங்கிச் சென்றார். பரம ஏழை ரொம்ப கஷ்டப்படுகிறார் என அங்கிருந்தவர்கள் அவரை கிண்டல் செய்தனர்,.

mla father get pongal gift
Author
Coimbatore, First Published Jan 12, 2019, 7:07 AM IST

தமிழகத்தில் பொங்கல் பரிசாக 1000 ரூபாயும், பொங்கல் வைப்பதற்கான பொருட்களும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதையடுத்து பொங்கல் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் அனைவருக்கு பொங்கல் பரிசு வழங்கக்கூடாது என்றும் வறுமைக்கட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும்  வழங்க வேண்டும் என திமுக சார்பில் டேனியல் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து நீதிமன்றமும் சர்க்கரை மட்டும் வாங்கும் ரேஷன்கார்டுதாரர்களுக்கு 1000 ரூபாய் வழங்கக் கூடாது என உத்தரவிட்டது.

mla father get pongal gift

இதற்கு தடை கேட்டு தமிழக அரசு சார்பில் தாக்ககல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்த  உயர்நீதிமன்றம் அனைவருக்கும் 1000 ரூபாய் வழங்கலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து அரசும், பொது  மக்களும் நிமமதிப் பொருமூச்சுவிட்டனர்.

இந்நிலையில்தான் சிங்காநல்லூர் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திக்கின் தந்தை, வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளதால், வரிசையில் நின்று பொங்கல் பரிசு 1000 ரூபாயை பெற்றுக்கொண்டார். நேற்று அங்கு உள்ள ரேஷன் கடைக்கு வந்த அவர் கியூவில் நின்று பொங்கல் பரிசை பெற்றார்.

mla father get pongal gift

எம்எல்ஏவின் தந்தை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர், அதனால் தான் கஷ்டப்பட்டு பொங்கல் பரிசு வாங்கிச் செல்கிறார் என அங்கிருந்தவர்கள் அவரைக் கிண்டல் செய்தனர். மேலும் 1000 ரூபாய் கொடுக்கக் கூடாது என வழக்கு போட்டுவிட்டு இப்படி பொங்கல் பரிசையும் பெற்றுக் செல்கிறார்களே,,,  இது தான் திமுக எனவும் கிண்டல் செய்தனர்,

Follow Us:
Download App:
  • android
  • ios