Asianet News TamilAsianet News Tamil

எல்லாமே போச்சு! இனி எம்.எல்.ஏ.வாகுறது எப்போது? விரக்தியில் 18, அ.ம.மு.க.வில் கலக ஜல்லிக்கட்டு

தீர்ப்பு நமக்கு சாதமாகதான் வரும்’ என்று கடந்த சில நாட்களாக தினகரன் தரப்பு தனது அணியின் 18 எம்.எல்.ஏ.க்களிடமும் சொல்லி வந்தது. இதனால்தான் ஆட்கடத்தல் எதுவும் நடந்துவிட கூடாது என்று சொல்லி, தங்க தமிழ்செல்வன் தலைமையில் மினி கூவத்தூர் மேளா ஒன்றை குற்றாலம் பக்கம் நடத்தினார்கள்.

MLA disqualification verdict... desperation 18 people
Author
Chennai, First Published Oct 25, 2018, 11:28 AM IST

தீர்ப்பு நமக்கு சாதமாகதான் வரும்’ என்று கடந்த சில நாட்களாக தினகரன் தரப்பு தனது அணியின் 18 எம்.எல்.ஏ.க்களிடமும் சொல்லி வந்தது. இதனால்தான் ஆட்கடத்தல் எதுவும் நடந்துவிட கூடாது என்று சொல்லி, தங்க தமிழ்செல்வன் தலைமையில் மினி கூவத்தூர் மேளா ஒன்றை குற்றாலம் பக்கம் நடத்தினார்கள். ‘நேரா கோட்டைக்கு போறோம்! கொடியை நட்டுறோம்! ஆட்சியை பிடிக்கிறோம்! அமைச்சர் ஆகிறோம்!’ என்று 18 எம்.எல்.ஏ.க்களில் பலர் பலவித கனவுகளில் இருந்தனர். ஆனால் அத்தனை பேருக்கும் சேர்த்து மொத்தமாய் ஆப்பு வைத்துவிட்டது தீர்ப்பு. MLA disqualification verdict... desperation 18 people

தீர்ப்பை தொடந்து சற்றே வெளிறிய முகத்துடன் ‘பெங்களூரு சென்று சசிகலாவை சந்தித்து மேல்முறையீடு! பற்றி முடிவெடுப்போம்.’ என்று தங்க தமிழ் சொல்லியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் தினகரன் கூடாரத்துக்குள் பெரும் களேபரம் துவங்கிவிட்டது என்கிறார்கள். புது முக எம்.எல்.ஏ.க்கள் சிலரும், அமைச்சர் கனவில் இருத சிலராலும் இந்த ஏமாற்றத்தை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. MLA disqualification verdict... desperation 18 people

எல்லாம் போச்சு, பதவியும் போச்சு. இனி இடைத்தேர்தல்ல இவங்களை எதிர்த்து நின்னு பிரச்சாரம் பண்ணி ஜெயிக்கிறதெல்லாம் நடக்கிற காரியமா? ஏதோ அம்மா இருந்தப்ப அவங்க முகம் கொடுத்த புண்ணியத்துல எம்.எல்.ஏ.வானேன். இனி என் வாழ்க்கையில இதெல்லாம் சாத்தியமா? வாய்ப்பே இல்ல. எல்லாம் முடிஞ்சது.” என்று புலம்புகிறார்களாம் முதல் முறை எம்.எல்.ஏ.வானவர்கள். 

MLA disqualification verdict... desperation 18 peopleசில சீனியர்களோ “ என்னய்யா இப்படி மறுபடியும் தோத்துட்டு நிக்குறோம்! இதுக்கு அப்பவே அங்கே போயிருந்தா என் சீனியாரிட்டிக்கெல்லாம் அமைச்சர் பதவியே கிடைச்சிருக்கும். இனி நாம எழுந்து, நின்னு, ஓடி ஜெயிக்கிறதெல்லாம் எப்படி சாத்தியம்?” என்கிறார்களாம். இதெல்லாம் தினகரனின் பார்வைக்கு போனாலும் கூட ‘எல்லாம் விரக்தியின் வெளிப்பாடு. சில மணி நேரங்கள்ளேயே தானாக தெளிஞ்சு சரியாகிடுவாங்க.” என்று நம்பிக்கை காட்டுகிறாராம். ஆனாலும் தினா கூடாரத்தினுள் மூண்டிருக்கும் இந்த கலக ஜல்லிக்கட்டு பெரியளவில் உலுக்கி எடுக்காமல் அடங்காது! என்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios