Asianet News TamilAsianet News Tamil

முஸ்லீம்களை ஒதுக்கி வைக்கணும் ! அவங்களுக்கு ஒண்ணும் செய்யக் கூடாது ! அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு !!

முஸ்லிம்கதான் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே... அப்புறம் நாங்க ஏன் உங்களுக்கு பண்ணித் தரணும்? நீங்க எங்களுக்கு ஓட்டுப் போடாம புறக்ணிச்சீங்கன்னா நீங்க எங்களை புறக்கணிச்சீங்கன்னா, ஜம்மு காஷ்மீர்ல ஒதுக்கிவச்ச மாதிரி இங்கயும் ஒதுக்கி வக்க வேண்டியிருக்கும் என இஸ்லாமின ஜமாத் தலைவர்களிடம் அமைச்சர் ராஜேந்தி பாலாஜி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

minister rajaendra balaji talk about musliems
Author
Nanguneri, First Published Oct 17, 2019, 8:48 PM IST

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர  பாலாஜி பொது வெளியில் பேசும் பேச்சுக்கள் எப்போதுமே சர்ச்சையை ஏற்படுத்தும். அதே நேரத்தில் அவர் தனது சர்ச்சைப் பேச்சை நிறுத்தியபாடில்லை… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் அதனைக் கண்டு கொள்வதில்லை.

minister rajaendra balaji talk about musliems

இந்நிலையில் நாங்குநேலி தொகுதி இடைத் தேர்தல் பணிகளை அமைச்சர் மேற்கொண்டு வருகிறார். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தொகுதிக்குட்பட்ட கருவேலங்குளத்தில் ஒரு வீட்டில் தங்கி தேர்தல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பக்கத்து கிராமமான  கேசவனேரி ஜமாத் தலைவர் அமைச்சரைப் பார்த்து தங்கள் ஊரில் ரேஷன் கடை அமைத்துத் தர வேண்டும் என மேனு அளித்தார்.

minister rajaendra balaji talk about musliems

அப்போது அவரைப் பார்த்து பேசிய அமைச்சர், எடுத்த எடுப்பிலேயே, முஸ்லிம்கதான் எங்களுக்கு ஓட்டுப் போட மாட்டீங்களே... அப்புறம் நாங்க ஏன் உங்களுக்கு பண்ணித் தரணும்? என முகத்துக்கு நேராக கேட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் நீங்களும் ஓட்டுப் போட மாட்டீங்க. கிறிஸ்டினும் எங்களுக்கும் ஓட்டுப் போட மாட்டாங்க. அப்புறம் ஏன் உங்களுக்கு நான் செஞ்சு தரணும்? என திரும்பவும் கேட்டார்.

minister rajaendra balaji talk about musliems

தொடர்ந்து இஸ்லாமியர்கள் எங்களுக்கு ஓட்டுப் போடாம புறக்கணிச்சீங்கன்னா, ஜம்மு காஷ்மீர்ல உங்கள ஒதுக்கி வச்ச மாதிரி இங்கயும் ஒதுக்கி வக்க வேண்டியிருக்கும். வெறும் 5% இருக்குற உங்களால என்ன செய்ய முடியும்?’ என்று  சொல்ல அமைச்சரைப்பார்க்க வந்தவர்கள் அதிர்ந்து போனார்கள். 
அமைச்சரின் இந்தப் பேச்சு இஸ்லாமிய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios