Asianet News TamilAsianet News Tamil

தொகுதிக்கே வராத அதிமுக பெண் எம்எல்ஏ வை கலாய்த்து துரத்தியடித்த பொது மக்கள்… சமாளித்த தம்பிதுரை!!

கரூர் அருகே, மனுக்கள் பெறும் நிகழ்ச்சியில், எம்.எல்.., கீதாவை, 'ராங் நம்பர்' என்று கலாய்த்த தொகுதி மக்களை, நாடாளுமன்ற  துணை சபாநாயகர் தம்பிதுரை சமாளித்தார். ஆனாலும் பொது மக்களின் தொடர் எதிர்ப்பால் எம்.பி.யும், எம்எல்ஏவும் அங்கிருந்து கிளம்பினர்.

 

krishnarayapuram mla geetha oppose by public
Author
Karur, First Published Nov 9, 2018, 8:33 AM IST

நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, கரூர் நாடாளுமன்ற  தொகுதிக்குட்பட்ட, சட்டசபை தொகுதிகளில், பொதுமக்களிடம் மனு பெற்று வருகிறார். இவர், தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்ற, பொதுவான குற்றச்சாட்டு உள்ளது. அவர் போகும் இடங்கிளில் எல்லாம் பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தேர்தல் வருவதால் தொகுதிப் பக்கம் வருகிறீர்களா ? என  பொது மக்கள் தம்பிதுரையை சராமாரியாக கேள்வி கேட்டு வருகின்றனர். இதை தம்பிதுரையும் சமாளித்து வந்தார்.

krishnarayapuram mla geetha oppose by public

 குறிப்பாக, கிருஷ்ணராயபுரம், அ.தி.மு.க., எம்.எல்.ஏ., கீதா, தொகுதி பக்கமே எட்டி பார்க்காததால், தம்பிதுரை அந்த தொகுதிக்கு செல்லும் போது, பொதுமக்கள் எதிர்ப்பால் திணறி வருகிறார்.


நேற்று கடவூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில், பொதுமக்களிடம் மனுக்களை பெற, தம்பிதுரையுடன், எம்.எல்.ஏ., கீதா மற்றும் அதிகாரிகள் சென்றனர். செல்லாண்டிபுரத்தில் மக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது, பாலப்பட்டியை சேர்ந்த பொதுமக்கள், 'எங்கள் கிராமத்தையே, எம்.எல்.ஏ.,வுக்கு தெரியாது. 'அவரை மொபைல் போனில் தொடர்பு கொண்டால், 'ராங் நம்பர்' என்று சொல்லி வைத்து விடுகிறார்' என, புகார் தெரிவித்தனர்.

krishnarayapuram mla geetha oppose by public
ஆனால் எம்எல்ஏ கீதா, 'அப்படிஎல்லாம் இல்லை' என்று பேச துவங்கியுடன், பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்.எல்.ஏ.,வை, 'ராங் நம்பர்' என கோரசாக கூறி கலாய்த்தனர்.
krishnarayapuram mla geetha oppose by public
அப்போது, துணை சபாநாயகர் தம்பிதுரை, ' அவர் ஐந்து ஆண்டுகள், மாவட்ட பஞ்சாயத்து தலைவராக இருந்தவர். அவருக்கு அனைத்து கிராமங்களும் தெரியும்' என்று கூறி, வேறு விஷயத்திற்கு பேசினார். ஆனாலும் பொது மக்கள் தொடர்நது அவர்கள் அங்கு இருப்பதை எதிர்த்து பொது மக்கள் முழக்கம் இட்டுக் கொண்டே இருந்ததால் அதிகாரிகளும், காவல் துறையினரும் பெண், எம்.எல்.ஏ.கீதா மற்றும் தம்பித்துரை ஆகியோரை அங்கிருந்து வேகமாக அழைத்து சென்றனர். இந்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Follow Us:
Download App:
  • android
  • ios