Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார் சோனியா !!

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க காங்கிரஸ் கட்சியில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளார். கருணாநிதி சிலையை அவர் திறந்து வைக்கிறார்.

karunanidhi statute in chennai
Author
Chennai, First Published Nov 30, 2018, 7:42 AM IST

ஐந்து முறை தமிழக முதலமைச்சராகவும், , 50 ஆண்டுகாலம் திமுகவின் தலைவராகவும், 70 ஆண்டுகள் அரசியலுக்கு சொந்தக்காரராகவும், பேச்சால், எழுத்தாளுமையால் சமூக நீதிக்காக வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர் கருணாநிதி. தொண்டர்களால் மரியாதையுடன் கலைஞர் என்று அழைக்கப்பட்ட அவர் முதுமை காரணமாக கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி காலமானார்.

karunanidhi statute in chennai

அவரது உடல் மெரினாவில் அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கருணாநிதிக்கு சென்னை அறிவாலயத்தில் சிலை அமைக்கப்படும் என திமுக சார்பில் அறிவிக்கப்பட்டது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா சிலைக்கு அருகில் அவருக்கு சிலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதற்கான பணியை பொன்னேரியில் உள்ள சிற்பி தீனதயாளன் வசம் ஒப்படைக்கப்பட்டு குறுகிய காலத்தில் அவர் சிலையை வடித்து முடித்தார்.

karunanidhi statute in chennai

இதையடுத்து  சென்னை அண்ணா அறிவாலயத்தில் பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட உள்ளது. கருணாநிதி சிலையுடன் திமுக  நிறுவனர் அண்ணாவுக்கும் புதிய சிலை அமைக்கப்பட உள்ளது. மேலும் மிக பிரமாண்டமான தி.மு.க. கொடி கம்பம் ஒன்றும் அங்கு நிறுவப்பட உள்ளது.

இதற்கான திறப்பு  விழா டிசம்பர் 16-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவை தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் விழாவாக மாற்ற ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

karunanidhi statute in chennai

பாஜகவுக்கு எதிராக உள்ள காங்கிரஸ் மற்றும் அனைத்து மாநில கட்சிகளையும் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கு மு.க. ஸ்டாலின் முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் திமுக. மூத்த தலைவர்களை பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

karunanidhi statute in chennai

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்று சோனியா சிலையைத் திறந்து வைக்கிறார். இதறகாக  காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னைக்கு வருகிறார் என திமுக தெரிவித்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளித்து ஸ்டாலினுக்கு சோனியா எழுதியுள்ள கடிதம் வெளியிடப்பட்டுள்ளது.

இதே போல் மேலும் சில முக்கிய எதிர்கட்சித் தலைவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios