Asianet News TamilAsianet News Tamil

ஜெயலலிதா அள்ளியது பத்து கோடி... ஓ.பி.எஸ்- ஈபிஎஸை நம்பி 25 ஆயிரம் கூட செலவழிக்க அதிமுகவில் ஆளில்லை..!

ஜெயலலிதா எனும் பெண் சிங்கம் அரசாண்ட அ.தி.மு.க.வானது, பார்ப்பதற்கே எதிரிகள் அஞ்சும் விஸ்வரூப வனமாக இருந்தது. அதுவும் தேர்தல் வந்துவிட்டால் அக்கட்சி காட்டும் பிரம்மாண்டம் இருக்குதே அதெல்லாம் அல்லு தெறித்த கில்லி காலங்கள்.

Jayalalithaa has created ten crore
Author
Tamil Nadu, First Published Feb 19, 2019, 12:56 PM IST

ஜெயலலிதா எனும் பெண் சிங்கம் அரசாண்ட அ.தி.மு.க.வானது, பார்ப்பதற்கே எதிரிகள் அஞ்சும் விஸ்வரூப வனமாக இருந்தது. அதுவும் தேர்தல் வந்துவிட்டால் அக்கட்சி காட்டும் பிரம்மாண்டம் இருக்குதே அதெல்லாம் அல்லு தெறித்த கில்லி காலங்கள்.
 
ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் வழங்கப்படுகிறது என்றால் சிங்கம் தன்னை சிலுப்பிக் கொண்டு தேர்தலுக்கு தயாராகிவிட்டது என்று அர்த்தம். ஜெ., இருந்த நிலையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு விண்ணப்பத்தின் விலை ரூபாய் இருபத்தைந்தாயிரம். இப்போதும் அதே தொகைதான். Jayalalithaa has created ten crore

ஆனால் ஜெயலலிதா இருந்த போது எவ்வளவு மனுக்கள் விற்பனை ஆகின, இப்போது எவ்வளவு ஆகியிருக்கின்றன! என்பதும், ஜெயலலிதா எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு பிரதமராக வேண்டும் எனும் வேட்கையில் எவ்வளவுபேர் அவருக்காக விண்ணப்பம் கட்டினார்கள், இப்போது எடப்பாடியார் - பன்னீர் இருவருக்குமாக எவ்வளவு பேர் கட்டியிருக்கிறார்கள் என்பது போன்றவற்றை கவனித்தாலே தானாக புரியும் ஜெயலலிதாவின் செல்வாக்குக்கும், இவர்கள் இருவரின் செல்வாக்கிற்கு இருக்கும் மலை - மடு வித்தியாசம். Jayalalithaa has created ten crore

* ஜெ., இருக்கும் போது வெறும் மூன்று நாட்கள்தான் மனுக்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும். ஆனால் இப்போது துவக்கத்தில் ஆனால் இந்த முறை  முதலில் ஒருவ் ஆரம் கொடுத்தும் அதிகளவு விற்பனை ஆகாத நிலையில் கூடுதலாக நான்கு நாட்கள் தந்தனர். அப்போதும் பெரிதாய் போணியாகவில்லை.

 Jayalalithaa has created ten crore

* ஜெ., இருந்தபோது கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது வெறும் 3 நாட்களில் நான்காயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் விற்பனையாகின. குறைந்தது நான்காயிரம் என்று வைத்துக் கொண்டாலும் கூட, ஒரு மனுவின் விலை இருபத்தைந்தாயிரம் எனும் வகையில் ஜெயலலிதா தலைமையிலான கழகம் பத்து கோடி ரூபாயை அள்ளியது. ஆனால் இப்போது பதினோறு நாட்கள் டைம் கொடுத்தும் அதில் பாதியான ஐந்து கோடியை கூட நெருங்கமுடியவில்லை பாவம். 

* ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட்ட வேண்டும் என்று சுமார் நானூறு பேர் நாற்பது தொகுதிகளிலும் மனு கட்டியிருந்தனராம் அப்போது. ஆனால் இப்போது ஈ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ்-க்காக வெறும் இரு நூறு பேர் கட்டியுள்ளனர்.

* பதினோறு நாட்கள் கால அவகாசம் கொடுத்தும் ரெண்டாயிரம் விண்ணப்பங்கள் கூட விற்காமல் போனதன் காரணம்...ஜெ., இருந்தபோது சாதாரண தொண்டனுக்கு கூட வாய்ப்பு கொடுத்து எம்.பி.யாக்குவார்! எனும் பெரும் நம்பிக்கை இருந்தது. ஆனால் இப்போது இவர்கள் நிச்சயம் அப்படி சாதாரண தொண்டனுக்கு, கீழ் நிலை நிர்வாகிகளுக்கு தரமாட்டார்கள் என்று நினைக்கின்றனர். அதனால்தான் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். இருவரையும் நம்பி ஒரு இருப்பத்தைந்தாயிரம் செலவு செய்ய கூட அ.தி.மு.க.வினர் தயாராக இல்லை என்று இதை விமர்சிக்கிறார்க்ள் அரசியல் பார்வையாளர்கள்.

 Jayalalithaa has created ten crore

* அ.தி.மு.க.வின் சிட்டிங் எம்.பி.க்களில் கிட்டத்தட்ட 90% பேர் மீண்டும் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளனராம். இதில் பி.ஜே.பி.யை மிக கடுமையாக விமர்சிக்கும் தம்பிதுரையும், அன்வர் ராஜாவும் அடக்கம். 

* ஆட்சிமன்றக் குழு உறுப்பினரான தமிழ்மகன் உசேன், ராமநாதபுரத்தில் சீட் கேட்டு விண்ணப்பிக்க, டென்ஷனான நடிகர் ரித்திஷ் ‘இவருக்கும் ராமநாதபுரத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவர் மனுவை நிராகரிப்பு செய்யுங்க.’ என்று கோரிக்கை வைத்த கையோடு நடிகரும், தன் கைப்பாவையுமான பஷீர் எனும் விஜய் கார்த்திக்கிற்கு அவரே பணம் கட்டியுள்ளாராம். அநேகமாக ராமநாதபுரத்தில் இந்த நபர்தான் வேட்பாளர் என இப்போதே ராயப்பேட்டையில் தகவல் கேட்கிறது. Jayalalithaa has created ten crore

* பன்னீரின் வாரிசு ரவீந்திரநாத், எடப்பாடியின் வாரிசு மிதுன்,  வைத்திலிங்கம் மகன் பிரபு, கே.வி.ராமலிங்கத்தின் மகன் ரதன் பிரித்வி, ராஜன் செலல்ப்பாவின் மகன் ராஜ்சத்யன், சி.வி.சண்முகத்தின் சகோதரர் ராமகிருஷ்ணன், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் அப்பா சின்னையன் போன்றோரின் பெயர்களும் சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் லிஸ்ட்டில் இருக்குதாம். ஸ்....அப்பா!

Follow Us:
Download App:
  • android
  • ios