Asianet News TamilAsianet News Tamil

சிவப்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெ சமாதி !! குவியும் தொண்டர்கள் !!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 2 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மெரீனாவில் உள்ள அவரது நினைவிடம் அழகிய சிவப்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலையிலே அங்கு குவிந்த நூற்றுக்கணக்கான அதிமுக தொண்டர்கள் மலர்கள் தூவியும், மலர் மாலைகளை வைத்தும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Jayalalitha Memoriel put red flowers and ready to pay homage
Author
Chennai, First Published Dec 5, 2018, 9:05 AM IST

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22 ஆம் தேதி திடீர் என உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிசிச்சை அளித்தும் பலனில்லாமல் டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி  இதே நாளில் மரணமடைந்தார்.

Jayalalitha Memoriel put red flowers and ready to pay homage

ஜெயலலிதாவின் மறைவு செய்தி கேட்டு தமிழக்தில் உள்ள லட்சக்கணக்கான  தொண்டர்கள் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். சென்னையை நோக்கி தமிழகம் முழுவதும் இருந்து ஆண்களும்,  பெண்களும் ஓடோடி வந்து ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஜெயலலிதாவின் அற்புத திட்டங்களால் அவரை மிகவும் நேசித்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இதையடுத்து அவரது உடல் மெரினாவில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே அடக்கம் செய்யப்பட்டது.

Jayalalitha Memoriel put red flowers and ready to pay homage

இந்நிலையில் இன்று ஜெயலலிதா இறந்த 2 ஆவது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையயொட்டி அவரது சமாதி அழகிய சிவப்பு பூக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Jayalalitha Memoriel put red flowers and ready to pay homage

இன்று அதிகாலையிலேயே அங்கு குவிந்த தொண்டர்கள் ஜெயலலிதாவின் சமாதியில் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து அதிமுக மற்றும் அமமுக கட்சியினர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios