Asianet News TamilAsianet News Tamil

ராமதாஸின் சாம்ராஜ்யத்தை காலி பண்ண 20 வருஷ அமைப்பை தோண்டி எடுத்த ஜகத்... டரியலாகி கிடங்கும் தைலாபுரம்!!

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வடமாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகனின் வீர வன்னியர் பேரவை, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது. தொகுதியில் வீரவன்னியர் பேரவை மட்டுமல்ல, வன்னியர் குல க்ஷத்திரியர் சங்கம் என்ற அமைப்பின் பெயரிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Jagathratchagan plan against Ramadoss and co
Author
Vikravandi, First Published Oct 15, 2019, 12:32 PM IST

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு வடமாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்த ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகனின் வீர வன்னியர் பேரவை, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு மீண்டும் துளிர் விட ஆரம்பித்துள்ளது. தொகுதியில் வீரவன்னியர் பேரவை மட்டுமல்ல, வன்னியர் குல க்ஷத்திரியர் சங்கம் என்ற அமைப்பின் பெயரிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

முதலில் ராமதாஸ் விக்கிரவாண்டி தொகுதியில் பிரச்சாரம் செய்வதாகவே இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட அவரது பிரச்சார சுற்றுப் பயணம் சுருக்கமாகவே இருந்தது. இடைத்தேர்தலில் அவர் பிரச்சாரம் செய்யும் திட்டமும் முதலில் இல்லை என்கிறார்கள். ஆனால் வன்னியர்களுக்கு திமுக என்னென்ன நன்மைகள் செய்திருக்கிறது ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை, தொகுதியில் இருக்கும் பா.ம.க வன்னியர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இந்த அறிக்கையின் தொடர்ச்சியாக நடந்த அறிக்கைப் போரில் கடலூர் எம்.ஆர்.கேவை எதிர்த்து தாமரைக் கண்ணன் ராமதாஸின் உத்தரவின் பேரில் அறிக்கை விட சூடாகாமல் கூலாகவே ஹேண்டில் பண்ணது திமுக கூடாரம்.

ஆனால், சில மணி நேரங்களில் தான் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார் தாமரைக் கண்ணன். இதனால் அதிர்ந்து போன ராமதாஸ் பாமகவுக்கு வட மாவட்டங்களில் உள்ள பலம் குறையவே தான களத்தில் இறங்கி வாக்கு வேட்டையாட முடிவெடுத்துவிட்டார்.

இடைத்தேர்தல் வாக்கு பதிவிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அன்புமணியும், ராமதாஸும் பிரச்சாரம் செய்யும் இடங்கள் உட்பட  வன்னியர்களுக்கு தனி ஒதுக்கீடு, இட ஒதுக்கீட்டு போராட்டத் தியாகிகளுக்கு மணிமண்டபம், அய்யா ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் அறிவித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு 3 கோடி வன்னியர்களின் நன்றி! நன்றி!நன்றி! என்று போஸ்டர்கள் தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.

அந்த போஸ்டரில் ஸ்டாலினை அடுத்து பெரிய சைசில் ஜெகத்ரட்சகன் படம் போடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர்கள் "வீர வன்னியர் பேரவை" என்ற பெயரில் ஒட்டப்பட்டிருக்கின்றன.  2001 ஆம் ஆண்டு ஜெகத்ரட்சகன் தொடங்கி நடத்திய வீர வன்னியர் பேரவை அமைப்பு, துரைமுருகனின் வற்புறுத்தலின் பேரில் ஜெகத்ரட்சகன் திமுகவுக்கு வந்தபிறகு, வீரவன்னியர் பேரவை பெரிதாக செயல்படவில்லை.

இந்நிலையில் இப்போது திடீரென ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து வீர வன்னியர் பேரவை சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு அதில் ஜெகத்ரட்சகன் படமும் பெரிய அளவில் இடம்பெற்றிருப்பதைப் பார்த்த பாமகவினரும், வன்னிய அமைப்பை சேர்ந்தவர்களும், ராமதாஸ் விக்கிரவாண்டி தொகுதிக்கு பிரச்சாரத்துக்கு வரும்போது அவரை டென்ஷன் ஆக்குவதற்காக ஜெகத் செய்த ஏற்பாடுதான் இது என்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios