Asianet News TamilAsianet News Tamil

பாபர் மசூதி முழுக்க தங்களுடைய இடமென இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை... உச்சநீதிமன்றம் அதிரடி..!

பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுடைய இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை,  என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்துள்ளார். 

Islamic organizations have not proved their place in the Babri Masjid ... Supreme Court Action!
Author
India, First Published Nov 9, 2019, 11:11 AM IST

நீண்ட நாட்கள் எதிர்பார்க்கப்பட்ட பாபர் மசூதி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. உத்தபிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் யாருக்குச் சொந்தம் என்கிற வழக்கில் கடந்த 2010ம் ஆண்டு  தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று சமமான பிரிவாக பிரித்து சன்னி வக்பு வாரியம், நிர்மோஹி அகாரா, ராம் லல்லா ஆகிய மூன்று அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டிருந்தது.  இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுகள் செய்யப்பட்டன.

Islamic organizations have not proved their place in the Babri Masjid ... Supreme Court Action!

பாபர் மசூதி இருந்த இடம் முழுக்க முழுக்க தங்களுடைய இடம் என இஸ்லாமிய அமைப்புகள் நிரூபிக்கவில்லை,  1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மீறிய செயல். 1856- க்கு பின்பு மட்டுமே இஸ்லாமியர்ககள் நமாஸ் செய்யும் முறையை பின் பற்றி இருக்கிறார்கள். 

நிலத்தின் உரிமையை நம்பிக்கையின் அடிப்படையில் முடிவு செய்ய முடியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டு சட்டம் நிலை நாட்டப்பட வேண்டும்.  நிர்மோகி அகார வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல.  மசூதி அடித்தளத்தில் இருக்கும் அமைப்பு இஸ்லாமிய கட்டடக்கலையை சேர்ந்ததல்ல. 1857ம் ஆண்டுக்கு முன்புவரை   இந்துக்கள் ஒரு பகுதிக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1857ம் ல் கட்டடத்தின் உள்பகுதிக்கும் வெளிப்பகுதிக்கும் இடையே தடுப்புகள் உருவாக்கப்பட்டன. Islamic organizations have not proved their place in the Babri Masjid ... Supreme Court Action!

மதங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை உச்சநீதிமன்றம் மதிக்கிறது. ஒரு மதத்தின் நம்பிக்கை மற்ற மதத்தினரின் நம்பிக்கையை தடுப்பதாக இருக்கக் கூடாது. அமைதியை காக்கவும், பாதுகாப்பை நிலைநாட்டுவதும் முக்கியம்  மத நம்பிக்கை என்பது ஓவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அயோத்தி தான் ராமர் பிறந்த இடம் என்பதை இந்துக்கள் நம்புகிறார்கள். ஆவணங்களின் படி இந்த சர்ச்சைக்குரிய நிலம் அரசுக்கு சொந்தமானதுIslamic organizations have not proved their place in the Babri Masjid ... Supreme Court Action!

நிலம் தொடர்பான மத்திய தொல்லியல் துறையின் கருத்தைநிராகரிக்க முடியாது. பாபர் மசூதி கட்டப்பட்ட இடம் இஸ்லாமிய கட்டடக் கலையை போன்றது அல்ல.  பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கெனவே இருந்த கட்டடம் இருந்துள்ளது. அதே இடத்தை பாபர் மசூதி என இஸ்லாமியர்கள் அழைக்கிறார்கள்.  ஷன்னி பிரிவுக்கு  எதிராக ஷியா வாரியம் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது’’ என ரஞ்சன் கோகாய் தீர்ப்பு வழங்கி வருகிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios