Asianet News TamilAsianet News Tamil

'பாஜகவுக்கு விட்டுக் கொடுத்தால் கட்சியை விட்டு விலகி விடுவேன்...' அமைச்சர் ஜெயகுமார் மிரட்டல்..!

அதிமுக கூட்டணி கட்சிகளுக்குள் நடைபெற்று வரும் தொகுதிப் பங்கீட்டு விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடைபெற்று வரும் தொகுதிப்பங்கீட்டில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. 

I will leave the party ... Minister Jayakumar threatens
Author
Tamil Nadu, First Published Mar 13, 2019, 12:47 PM IST

அதிமுக கூட்டணி கட்சிகளுக்குள் நடைபெற்று வரும் தொகுதிப் பங்கீட்டு விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே நடைபெற்று வரும் தொகுதிப்பங்கீட்டில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது.

 I will leave the party ... Minister Jayakumar threatens

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி பாஜக கன்னியாகுமரி, தென்சென்னை, திருச்சி, கோவை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய தொகுதிகளை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், அதிமுக தென்சென்னை தொகுதியை பாஜகவுக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என அடம்பிடித்து வருகிறார் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார். இவரது மகன் ஜெயவர்தன் இந்தத் தொகுதியில் கடந்த 2014ல் மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.I will leave the party ... Minister Jayakumar threatens

அந்தத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக உள்ள தனது மகனுக்கே மீண்டும் தென் சென்னை தொகுதி வழங்கப்பட வேண்டும். பாஜகவுக்கு விட்டுக் கொடுக்கக்கூடாது என பிடிவாதமாக உள்ளார். மீறி தென்சென்னை தொகுதியை பாஜகவுக்கு விட்டுக் கொடுத்தால் கட்சியை விட்டு விலகி தனது மகனை சுயேட்சையாக களமிறக்கி வெற்றி பெற வைப்பேன்’ என ஜெயகுமார் அதிமுக தலைமையிடம் எச்சரிக்கை விடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. I will leave the party ... Minister Jayakumar threatens

அதேவேளை தென்சென்னை தங்களுக்கு செல்வாக்குள்ள தொகுதி. அந்தத் தொகுதியை தங்களுக்கே விட்டுக்கொடுக்க வேண்டும் என பாஜக தொடர்ந்து கேட்டு வருகிறது. தற்போதைய நிலைப்படி ஜெயகுமார் எச்சரிக்கை விடுத்து வருவதால் மீண்டும் அதிமுக சார்பில் ஜெயகுமார் மகன் ஜெயவர்தன் களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.  

Follow Us:
Download App:
  • android
  • ios