Asianet News TamilAsianet News Tamil

கருணாநிதியைப் போல எனக்கு எழுதவோ, பேசவோ, தெரியாது..!! திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கம்..!!


பின்னர் மேடையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் அதிக செலவு  செய்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மாநில அரசு மட்டுமல்ல,  மத்திய அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  வெற்றி சாதாரணமாக கிடைக்காது. துடைக்கவும் விடமாட்டார்கள்.  நம்மிடம் ஒற்றுமை இன்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது.  எனக்கு கலைஞரைப் போல பேசவோ,  எழுதவோ,  தெரியாது ஆனால் எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு

i don't know write and speak as karunanithi but i can struggle to victory
Author
Chennai, First Published Nov 10, 2019, 4:37 PM IST

என்னுடைய சக்தியையும் தாண்டி நான் உழைத்து வருகிறேன். எனக்கு கருணாநிதி போல் பேசவோ, எழுதவோ தெரியாது, ஆனால் எதையும் முயற்சி செய்யும் துணிவு எனக்குண்டு  என பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  பேசியுள்ளார் இது திமுக தொண்டர்கள் மத்தியில் உருக்கத்தையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

i don't know write and speak as karunanithi but i can struggle to victory

திமுக பொதுக்குழு கூட்டம் முதன்முதலாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் சட்ட திருத்தம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது  உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிக்க பொதுக்குழுவில் முடிவு எடுக்கப் பட்டுள்ளது, அத்துடன் 21 தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது, குறிப்பாக, திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம்,  திமுக அமைப்புத் தேர்தலை அடுத்த ஆண்டுக்குள் நடத்தி முடிப்பது என தீர்மானம்.i don't know write and speak as karunanithi but i can struggle to victory

 வெளிநாடுவாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க கட்சி விதிகளில் திருத்தம். வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும் என திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம். நிறைவேற்றப் பட்டுள்ளது. அத்துடன், திமுக இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை நிர்ணயித்து கட்சி விதிகளில் திருத்தம் செய்வது, மற்றும்   ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி தீர்மானம்,  தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி  தீர்மானம். அத்துடன்  கூட்டாட்சி அமைப்பு முறையைதான் திமுக வலியுறுத்தி வருகிறது - அரசியலமைப்பு சட்ட முகப்பில் உள்ள அடிப்படை பண்புகளை சிதைக்க திமுக ஒப்புக்கொள்ளாது. மாநில அரசின் சில அதிகாரங்களை, மத்திய அரசு தன் கைவசம் வைத்துள்ளது. விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையை இந்தியாவில் பின்பற்ற வேண்டும்.தேர்தலில் விகிதாச்சார அடிப்படையில் பிரதிநிதித்துவ அதிகாரம் வேண்டும். தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு தர மத்திய அரசு உரிய சட்டத்திருத்தம் செய்யக்வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

i don't know write and speak as karunanithi but i can struggle to victory

பின்னர் மேடையில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், அமைச்சர்கள் அதிக செலவு  செய்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றனர்,  திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என மாநில அரசு மட்டுமல்ல மத்திய அரசும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.  வெற்றி சாதாரணமாக கிடைக்காது.  கிடைக்கவும் விடமாட்டார்கள்,  நம்மிடம் ஒற்றுமை இன்றி உழைத்தால் வெற்றி கிடைக்காது.  எனக்கு கலைஞரைப் போல பேசவோ,  எழுதவோ,  தெரியாது. ஆனால் எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு.  மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.  முரசொலியை மூடுவோம் என பொன். ராதாகிருஷ்ணன் பேசுகிறார்,  அதை பூட்டு போட நாங்கள் விட்டுவிடுவோமா.  முரசொலி இருக்கும் நிலம் பஞ்சமி நிலம் என அரசு கண்டுபிடித்தால் அந்த தகவலை வெளியிடாமல் இருப்பார்களா.  விரைவில் கொள்ளைக் கூட்டத்தை வெளியே அனுப்புவோம் என அவர் பேசியுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios