Asianet News TamilAsianet News Tamil

ஓசூர் தொகுதி காலி... திமுகவைவிட காங்கிரஸ் கட்சி உற்சாகம்

அமைச்சரும் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணாவின் பதவி பறிபோனதில் திமுகவைவிட காங்கிரஸ் கட்சியினர் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர்.

Hosur constituency empty...congress happy
Author
Tamil Nadu, First Published Jan 8, 2019, 10:43 AM IST

அமைச்சரும் ஓசூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணாவின் பதவி பறிபோனதில் திமுகவைவிட காங்கிரஸ் கட்சியினர் கூடுதல் உற்சாகத்தில் உள்ளனர்.

2016 சட்டப்பேரவைத் தேர்தல் ஓசூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராவனர் பாலகிருஷ்ணா. இந்தத் தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் கே. கோபிநாத் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது ஓசூர் தொகுதி காலியாகும் நிலை ஏற்பட்டிருப்பதால், திமுக, அமமுகவைவிட கிருஷ்ணகிரி காங்கிரஸார் தான் உற்சாகத்தில் இருக்கிறார்கள். Hosur constituency empty...congress happy

இதற்கு காரணம் இல்லாமல் இல்லை. காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கு வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்ந்து தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே காலியாக உள்ள 20 தொகுதிகளில் சோளிங்கர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் போட்டியிட்டு தோல்வியடைந்தது. தற்போது காலியாக இருக்கிற ஓசூர் தொகுதியும் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டு தோல்வியடந்த தொகுதிதான். இடைத்தேர்தல் நடக்கும்போது ஏற்கனவே போட்டியிட்ட தொகுதி என்ற வகையில் சோளிங்கர் தொகுதியை திமுகவிடம் கேட்டு பெற தமிழக காங்கிரஸ் தலைமை திட்டம் வைத்திருக்கிறது. Hosur constituency empty...congress happy

தற்போது ஓசூர் தொகுதியும் காலியாக விட்டதால், இந்தத் தொகுதியையும் கூட்டணி தர்மம் கருதி காங்கிரஸ் தலைமை கேட்க வாய்ப்பு இருக்கிறது. 21 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் போது அதில் காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்பதால், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தில் உள்ளனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸார் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios