Asianet News TamilAsianet News Tamil

மை வைத்த விரலை செல்ஃபி எடுத்து அனுப்பினால் ரூ.7,000 பரிசு... தேர்தல் ஆணையம் அதிரடி..!

வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
 

First Time voters ink put on the finger sent photo
Author
Tamil Nadu, First Published Apr 8, 2019, 4:08 PM IST

வாக்களிப்பவர்கள் மை வைத்த விரலை செல்பி எடுத்து அனுப்பினால் ரூ.7000 பரிசு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக இந்தியாவில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கில் உள்ள மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் ஒரே ஒரு பாராளுமன்ற தொகுதி இருக்கிறது. இந்த தொகுதியில் வருகிற 11-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.First Time voters ink put on the finger sent photo

இந்த முறை ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க மிசோரம் தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. அதற்காக முதல்முறை வாக்காளர்கள் ஓட்டுபோட்டு முடித்ததும் ஆள்காட்டி விரலில் வைக்கப்பட்டுள்ள 'மை'யை செல்பி படம் எடுத்து அனுப்பினால் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

First Time voters ink put on the finger sent photo

மேலும் வாக்களித்ததை உறுதி செய்ததை காட்டும் மிகச் சிறந்த செல்பிக்கு முதல் பரிசாக ரூ.7ஆயிரம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2வது சிறந்த செல்பிக்கு ரூ.3 ஆயிரம் பரிசும், 3வது சிறந்த செல்பிக்கு ரூ.2 ஆயிரம் பரிசும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios