Asianet News TamilAsianet News Tamil

ஜெ. நினைவிடத்தில் இபிஎஸ் - ஓபிஎஸ் மரியாதை!

EPS in the Jayalalitha memorial - OBS respect!
EPS in the Jayalalitha memorial - OBS respect!
Author
First Published Nov 23, 2017, 6:24 PM IST


இரட்டை இலை சின்னம் எடப்பாடி-பன்னீர் அணிக்கு ஒதுக்கப்பட்டதை அடுத்து, ஜெயலலிதா நினைவிடம் சென்ற முதல்வரும், துணை முதல்வரும் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செய்தார்.

அதிமுக இயக்கத்தை உடைத்துவிடலாம், கலைத்து விடலாம் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடியாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு உள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

எடப்பாடி-பன்னீர் அணிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டதை அடுத்து, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை கழகத்திற்கு வந்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், தற்போதைய ஆட்சி மக்களாட்சியாகவே செயல்படும் எனவும் இயக்கத்தையும் ஆட்சியையும் வெற்றிப்பாதையில் கொண்டு செல்வோம் எனவும் தெரிவித்தார். ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப இயக்கம் உள்ளது எனவும் முழு வெற்றியையும் எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்கு அர்பணிக்கிறோம் எனவும் குறிப்பிட்டார். 

EPS in the Jayalalitha memorial - OBS respect!

இதன் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது பேசிய அவர், அதிமுக தொண்டர்களை கண்ணை இமை காப்பதுபோல காத்து வந்த நிலையில், அதனை நாங்களும் செய்வோம் என்று கூறினார். அத்தனை தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். 

EPS in the Jayalalitha memorial - OBS respect!

அதிமுக இயக்கத்தை உடைத்துவிடலாம், கலைத்துவிடலாம் என்று நினைத்தவர்களுக்கு சம்மட்டி அடியாக தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பு உள்ளது என்றார். எதிர்கட்சியினரோடு சேர்ந்து சதி செய்தவர்களுக்கெல்லாம் ஆண்டவன் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளான். நாங்கள் அனைவரும் ஒருமித்த கருத்தோடு இங்கு கூடியுள்ளோம்.

EPS in the Jayalalitha memorial - OBS respect!

இதன் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், ஓபி.எஸ் ஆதரவாளர்கள் ஆகியோர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு சென்றனர். அங்கு ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

EPS in the Jayalalitha memorial - OBS respect!

பின்னர் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு சென்ற அவர்கள், அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர், அண்ணா நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Follow Us:
Download App:
  • android
  • ios