Asianet News TamilAsianet News Tamil

விரட்டி விரட்டி அடிக்கும் மத்திய அரசு... சின்னாபின்னமாகும் ப.சிதம்பரம்...!

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, அக்டோபர் 24-ம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளார்.

Enforcement Directorate custody Chidambaram has been extended till 24th October
Author
Delhi, First Published Oct 17, 2019, 6:28 PM IST

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு டெல்லி சிபிஐ நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, அக்டோபர் 24-ம் தேதி சிதம்பரத்தை ஆஜர்படுத்த அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ப.சிதம்பத்தை சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் 2 தடவை காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு ப.சிதம்பரம் டெல்லி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து, அவரது ஜாமீன் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு அவரது காவல் நீட்டிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2 மாதமாக அவர் திகார் ஜெயிலில் இருந்து வருகிறார்.

Enforcement Directorate custody Chidambaram has been extended till 24th October

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் சிபிஐ காவல் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ப.சிதம்பரத்தை கைது செய்ததும், அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும், அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக இருந்து வந்தனர். எனவே ப.சிதம்பரத்தை 14 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் மனு அளித்தனர். 

Enforcement Directorate custody Chidambaram has been extended till 24th October

இந்த வழக்கின் விசாரணையில் போது ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி வழங்கக்கூடாது எதிர்ப்பு தெரிவித்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ப.சிதம்பரத்தை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன் அக்டோபர் 24-ம் தேதி சிதம்பரத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் உத்தரவிட்டுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios