Asianet News TamilAsianet News Tamil

இவரு யாரென்று கண்டுபிடிங்க பார்க்கலாம்..! இன்னைக்கு ஸ்டேட், சென்ட்ரல்னு கலக்குறார்..!

அதிமுகவில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தினகரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் முதல்வராக கம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.

Edappadi Palaniasamy History
Author
Tamil Nadu, First Published Feb 22, 2019, 1:58 PM IST

அதிமுகவில் யாரும் எதிர்பாராத விதமாக தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தினகரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த ஆட்சியை கவிழ்த்துவிடலாம் என்று பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்த போதிலும் முதல்வராக கம்பீரமாக வலம் வந்துகொண்டிருக்கிறார். 

தற்போது முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி, பொதுப்பணித் துறை அமைச்சராக, அதிமுக துணை ஒருங்கிணைப்பாளராகவும் இருக்கிறார்.  ஆரம்ப நாள் முதலே ஜெயலலிதாவின் விசுவாசியாக இருந்து வந்தார். சிறுவயதில் இருந்தே அதிமுகவின் தீவிர விசுவாசி. தற்போது இவருடைய பழைய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. மேலே உள்ள புகைப்படத்தில் இருப்பவர் வேறு யாருமல்ல முதல்வர் எடப்பாடியின் சிறுவயது படம்தான் அது. 

இவரை பற்றியும், கடந்து வந்த அரசியல் பாதையை பற்றியும் அறிந்து கொள்ளலாம் வாங்க... 

சேலம் மாவட்டம், எடப்பாடி ஒன்றியம், நெருங்குளம் ஊராட்சி, சிலுவம்பாளையம் கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்புசாமியின் மகன் எடப்பாடி பழனிசாமி, 63. இவர், பி.எஸ்.சி., படித்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவியும், மிதுன்குமார் (பி.இ.,) என்ற மகனும் உள்ளனர். 1972-ல் ஆண்டு அ.தி.மு.க.,வில் இணைந்து, சிலுவம்பாளையம் கிளை செயலாளராகவும், 1983-ல் ஒன்றிய இணை செயலாளராகவும், அ.தி.மு.க.,வில் பதவி வகித்தார்.

  Edappadi Palaniasamy History

1989-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். உயிரிழந்தார். அப்போது அதிமுக இரண்டு அணியாக பிரிந்தது. மனைவி ஜானகி தலைமையில் ஒரு அணியும், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியாக செயல்பட்டு வந்தது. ஜெயலலிதா அணியில், எடப்பாடி தொகுதியில், சேவல் சின்னத்தில் போட்டியிட்டு, வெற்றி பெற்று எம்.எல்.ஏ.,வானார். 1991-ம் ஆண்டு அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு மீண்டும் எம்.எல்.ஏ.வாக தேர்வானார். 

பின்னர் கடந்த 1996, 2006-ல் நடந்த எடப்பாடி சட்டப்பேரவை தேர்தல்களில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2001-ல், சிமெண்ட் வாரிய தலைவராகவும், பின்னர் அ.தி.மு.க., கொள்கைபரப்பு செயலாளராகவும் இவரை ஜெயலலிதா அறிவித்தார். 1998-ல் நடைபெற்ற மக்களவை தேர்தலில், திருச்செங்கோடு தொகுதியில் வெற்றி பெற்றார்.

  Edappadi Palaniasamy History

அதேபோல் 1999, 2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல்களில், திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். கடந்த, 2011 சட்டப்பேரவை தேர்தலில், எடப்பாடி தொகுதியில் வெற்றி பெற்று, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து, அ.தி.மு.க.,வில், சேலம் புறநகர் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்டம் ஒருங்கிணைந்த, சேலம் புறநகர் மாவட்ட செயலாளராக இருந்து வந்தார். கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவையில் தேர்தலில் வெற்றி பெற்று பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை, சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சராக உள்ளார். மேலும், மாவட்ட செயலாளர் பதவியுடன், தலைமை நிலைய செயலாளர், கட்சி ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். Edappadi Palaniasamy History

2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைந்தார். இதனையடுத்து அ.தி.மு.க.,வில் முதல்வர் பன்னீர்செல்வம் ஒரு அணியும், பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்ட சசிகலா மற்றொரு அணியாகவும் இருந்தனர். சசிகலாவை முதல்வராக கொண்டு வருவதற்கு, அமைச்சர் பழனிசாமி ஆதரவு தெரிவித்தார். சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு உச்சநீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியதால், முதல்வர் பதவிக்கு சசிகலா போட்டியிட முடியாத நிலை உருவானது. அதையடுத்து, சசிகலா அணியினர், அ.தி.மு.க., சட்டப்பேரவை குழு தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். Edappadi Palaniasamy History

இதனையடுத்து ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்தனர். பிறகு தினகரன், எடப்பாடி பழனிச்சாமி தனி அணியாக செயல்பட்டு வந்தார். இந்த ஆட்சியை கவிழ்ப்பதற்காக தினகரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முயற்சிகளை ஈடுபட்டு வந்தனர். ஆனால் இந்த முயற்சிகள் எல்லாம் தோல்விலேயே முடிந்தன. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக 2-ம் ஆண்டு அடியெடுத்து வைத்து வலம் வந்துக்கொண்டிருக்கிறார். Edappadi Palaniasamy History

இந்நிலையில் வருகிற மக்களவை தேர்தலில் ஜெயலலிதா பாணியில் எடப்பாடி பழனிச்சாமி வலிமையான கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளார். இதுவரை வெற்றியே தன் வசமாக்கிக் கொண்டு வந்த எடப்பாடி பழனிச்சாமி மக்களவை தேர்தலில் சாதிப்பாரா என்று பொருத்திருந்து பார்க்க வேண்டும். 

Follow Us:
Download App:
  • android
  • ios