Asianet News TamilAsianet News Tamil

இடைத்தேர்தல் வெற்றி களைச்ச அதிமுகவுக்கு ஜில் தண்ணீர் கிடைச்ச மாதிரி... அது திரும்பவும் கிடைக்காது... துரைமுருகன் ட்ரேட்மார்க் பேட்டி!

திமுகவில் பொதுச்செயலாளர் ஓய்வில் இருந்துவருகிறார். அவர் ஓய்வில் இருந்தாலும் அவருடைய பணிகளை அவரிடம் தெரிவித்துவிடுகிறோம். அவரிடம் கேட்டு அனுமதி பெற்ற பிறகே அறிக்கைகளை வெளியிடுகிறோம்.  நீங்கள் கேட்கும் ஊகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது. புதிய பொதுச்செயலரை தேர்வு செய்வதை கட்சி கூடி முடிவு செய்யும்.

DMK Treasure Duraimurugan on bye election result
Author
Chennai, First Published Nov 3, 2019, 8:23 AM IST

விக்கிரவாண்டி, நாங்குநேரியில் கிடைத்த அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி நடந்துவந்த களைப்பில் வந்தவருக்கு ஒரு டம்பளர் தண்ணீர் ஜில்லுன்னு கிடைத்தது மாதிரிதான் என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். DMK Treasure Duraimurugan on bye election result
திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் வயது முதிர்வால் ஏற்பட்ட உடல் நலப் பாதிப்பால் வீட்டிலேயே ஓய்வில் உள்ளார். கட்சி நிகழ்ச்சிகள் உள்பட எந்த நிகழ்ச்சியிலும் அன்பழகனால் பங்கேற்க இயலவில்லை. கட்சி அறிக்கைகள் மட்டும் அவருடைய பெயரில் வெளியாகிவருகின்றன. எனவே பொதுச்செயலாளர் அதிகாரத்தை கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் வைத்துக்கொள்ளப் போவதாகவும் அன்பழகனுக்குப் பதிலாக திமுக பொருளாளர் துரைமுருகன் பொதுச்செயலராக நியமிக்கப்பட உள்ளதாகவும் திமுக வட்டாரங்களில் பேச்சுகள் உலாவுகின்றன.

DMK Treasure Duraimurugan on bye election result
இந்நிலையில் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது. இது குறித்த தகவல்களை வைத்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். “திமுகவில் பொதுச்செயலாளர் ஓய்வில் இருந்துவருகிறார். அவர் ஓய்வில் இருந்தாலும் அவருடைய பணிகளை அவரிடம் தெரிவித்துவிடுகிறோம். அவரிடம் கேட்டு அனுமதி பெற்ற பிறகே அறிக்கைகளை வெளியிடுகிறோம்.  நீங்கள் கேட்கும் ஊகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் கூற முடியாது. புதிய பொதுச்செயலரை தேர்வு செய்வதை கட்சி கூடி முடிவு செய்யும்.” என்று துரைமுருகன் தெரிவித்தார்.

 DMK Treasure Duraimurugan on bye election result
விக்கிரவாண்டி, நாங்குநேரி வெற்றியை அடுத்து உள்ளாட்சித் தேர்தலை நடத்தி வெற்றி பெற அதிமுக திட்டமிடுவது குறித்து கேள்விக்கு பதில் அளித்த துரைமுருகன், “நாடாளுமன்றத் தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல், வேலுார் லோக்சபா தேர்தல் என வரிசையாக அதிமுக தோல்வி அடைந்தது. நடந்துவந்த களைப்பில் வந்தவருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்ததும், ஜில்லுனு இருக்கும் அல்லவா? அபோல இடைத்தேர்தலில் வெற்றி கிடைத்ததும் அதிமுகவினர் அப்பாடா வெற்றி எனப் பெருமூச்சு விட்டுகொண்டிருக்கிறார்கள். இது உள்ளாட்சித் தேர்தலிலும்  அவர்களுக்கு வெற்றியைக் கொடுத்துவிடாது. உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக தயாராக உள்ளது.” என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios