Asianet News TamilAsianet News Tamil

உளவுத் துறை அறிக்கையால் உற்சாகத்தில் திமுக... 4 தொகுதிகளை வெல்ல அதிரடி வியூகம்!

மத்திய உளவுத் துறையின் அறிக்கையால் உற்சாகமடைந்துள்ள திமுக, எஞ்சிய 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் முழுமையாக கவனத்தைச் செலுத்தி வெற்றி பெறும் திட்டங்களை வகுத்துவருகிறது. 

DMK plan to contest 4 constituency in full strength
Author
Chennai, First Published Apr 20, 2019, 9:24 AM IST

தமிழகத்தில் நடந்த தேர்தல் பற்றி மத்திய உளவுத் துறை அளித்துள்ள அறிக்கையால் உற்சாகத்தில் உள்ள திமுக, 4 தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் முழு பலத்தோடு எதிர்கொள்ள தயாராகிவருகிறது.

 DMK plan to contest 4 constituency in full strength
தமிழகத்தில் 38 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் காலியாக இருந்த 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்குமான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடந்துமுடிந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் 71.80 சதவீத வாக்குகளும், சட்டப்பேரவை இடைத் தேர்தலில் 72.62 சதவீத வாக்குகளும் பதிவாகின. இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 11 தொகுதிகளில் வெல்லும் என்றும் எஞ்சிய தொகுதிகளில் போட்டி கடுமையாக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த அறிக்கையால்  திமுக தரப்பு உற்சாகத்தில் உள்ளது. DMK plan to contest 4 constituency in full strength
இதனையடுத்து எஞ்சிய 4 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் முழுமையாக கவனத்தைச் செலுத்தி வெற்றி பெறும் திட்டங்களை திமுக வகுத்துவருகிறது. 4 தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவிக்க, ஆளும்  தரப்பு விருப்ப மனுக்களை பெறும் அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில், திமுகவோ வேட்பாளர்களை அறிவித்து தற்போது பொறுப்பாளர்களின் பெயர்களையும் வெளியிட்டுள்ளது. அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகள் அதிமுகவுக்கு பல சந்தர்ப்பங்களில் கைகொடுத்திருப்பதால், திமுக திண்ணைப் பிரசாரங்களை கையில் எடுக்க முடிவு செய்துள்ளது.DMK plan to contest 4 constituency in full strength
திமுக தலைவர் ஸ்டாலினும், அக்கட்சியின் முன்னணியினரும் 4 தொகுதிகளில் வலம் வந்து பிரசாரம் செய்ய வியூகம் வகுக்கப்பட்டுவருகிறது.  இந்த 4 தொகுதிகளிலும் கடந்த காலங்களில் அதிமுக பெரும் வெற்றி பெற்றுள்ளதால், இந்த 4 இடைத்தேர்தல்களில் அதிமுகவுக்கே வெற்றி கிடைக்கும் என ஆளுங்கட்சி தரப்பு உறுதியாக நம்புகிறது. திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய தொகுதிகளில் மறைந்த வேட்பாளர்களின் உறவினர்களுக்கு சீட்டு கொடுக்க அக்கட்சி முடிவு செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சியில் பலமான வேட்பாளர்களை களமிக்க அதிமுக முடிவு செய்திருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிகின்றன.

DMK plan to contest 4 constituency in full strength
ஏற்கனவே நடந்த 18 தொகுதிகளிலும் நடைபெற உள்ள 4 தொகுதிகளிலும் குறைந்தபட்சம் 9 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தொடர்வதில் சிக்கல் இருக்காது என அதிமுக நம்புவதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios