Asianet News TamilAsianet News Tamil

வன்னியர்களுக்காகப் பேசும் மு.க. ஸ்டாலின்... பொறுக்க முடியாத சுயநலவாதிகள்... பாமகவை வறுத்தெடுத்த திமுக எம்.பி.!

வன்னியர்களுக்கு திமுக என்னென்ன செய்தது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பேசியும் அறிக்கையும் விட்டு வருகிறார். ஸ்டாலினின் அறிக்கைக்கு ராமதாஸ் அவ்வப்போது எதிர்ப்பும் பதிலடியும் தந்துவருகிறார். ராமதாஸின் இந்த பதிலடிக்கு திமுக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மூலமும் திமுக தரப்பில் பதில் அளிக்கப்பட்டுவருகிறது. 

DMK MP attacked pmk on m.k.stalin's vanniyar speech
Author
Chennai, First Published Oct 15, 2019, 6:31 AM IST

வன்னியர் சமுதாயத்தை தங்களின் சுயநலத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் பயன்படுத்திக் கொண்டவர்களால் மு.க.ஸ்டாலின் பேச்சை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என திமுக செய்தித் தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

DMK MP attacked pmk on m.k.stalin's vanniyar speech
இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி வன்னியர்கள் அதிகம் நிறைந்துள்ள விழுப்புரம் மாவட்டத்தில் வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸின் சொந்த மாவட்டத்தில் இத்தொகுதி வருவதால், இடைத்தேர்தல் வெற்றி பெறுவதைக் கவுரமாக அக்கட்சி பார்க்கிறது. இதேபோல நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியை தக்க வைக்கும் முயற்சியில் திமுகவும் முனைப்பில் உள்ளது. விக்கிரவாண்டி தேர்தல் பிரசார களத்தையொட்டி வன்னியர்களுக்கு திமுக என்னென்ன செய்தது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து பேசியும் அறிக்கையும் விட்டு வருகிறார். DMK MP attacked pmk on m.k.stalin's vanniyar speech
ஸ்டாலினின் அறிக்கைக்கு ராமதாஸ் அவ்வப்போது எதிர்ப்பும் பதிலடியும் தந்துவருகிறார். ராமதாஸின் இந்த பதிலடிக்கு திமுக தலைவர்கள் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் மூலமும் திமுக தரப்பில் பதில் அளிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் திமுக் செய்தி தொடர்பாளரும் எம்.பி.யுமான டி.கே.எஸ்.இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கை: 
“திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விக்ரவாண்டி தொகுதியில் ஆற்றிய உரையில், “வன்னியர் இனத்துக்காகக் குரல் கொடுத்து உயிர் நீத்த தியாகிகளுக்கு திமுக ஆட்சி அமைந்தவுடன் மணி மண்டபம் அமைப்போம் என்ற அந்த உறுதிமொழியை நான் தந்திருக்கிறேன்" என்று அவர் கூறியது 13.10.2019 தேதியிட்ட முரசொலி பத்திரிக்கையில் பக்கம் 7ல் தெளிவாக வெளிவந்துள்ளது.DMK MP attacked pmk on m.k.stalin's vanniyar speech
மேலும் "அதே உணர்வோடுதான் வன்னிய சமுதாயத்தில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ‘ஏ.ஜி’ என்று அந்நாளில் எல்லோராலும் அன்போடு அழைக்கப்பட்ட ஏ. கோவிந்தசாமிக்கு மணி மண்டபம் அமைக்க வேண்டும். காரணம், ஏ.ஜி. அவர்களும் இந்தத் தமிழ்ச் சமுதாயத்திற்காகப் பாடுபட்டவர்- பணியாற்றியவர்" என்ற மு.க. ஸ்டாலினின் பேச்சும் முரசொலியில் தெளிவாகப் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் முரசொலி பத்திரிக்கையில் வெளிவந்ததை மறைத்து விட்டு, பத்திரிக்கை செய்தியில் தவறுதலாக வெளி வந்துள்ள "Typographical Error"-ஐ வைத்துக் கொண்டு, கழகத் தலைவர் பிரச்சாரத்தில் எந்த இடத்திலும் குறிப்பிடாத, ராமசாமி படையாச்சியாருக்கு மணிமண்டபம் என்பதைக் குறிப்பிட்டு, சிலர் அரசியல் ஆதாயம் தேட முயற்சி செய்வதிலிருந்தே  வன்னியர்களுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கும், ஏ.ஜி. என்று அன்போடு அழைக்கப்படும் ஏ.கோவிந்தசாமிக்கும் மணிமண்டபம் அமைக்கப்படும் என்ற தலைவரின் அறிவிப்பை- இதுநாள் வரை வன்னியர் சமுதாயத்தை தங்களின் சுயநலத்துக்காகவும் குடும்பத்துக்காகவும் பயன்படுத்திக் கொண்டவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்பது புலனாகிறது” என இளங்கோவன் தெரிவித்துள்ளார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios