Asianet News TamilAsianet News Tamil

திமுக பொதுக்குழுவில் நிர்வாகிகளை அசரவைத்து கிரங்கடிக்கும் வகையில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றம்..!

திமுக பொதுக்குழு கூட்டம் முதன்முதலாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் சட்ட திருத்தம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

DMK General Committee meeting...21 Fulfillment of Resolutions
Author
Tamil Nadu, First Published Nov 10, 2019, 12:22 PM IST

திருநங்கைகளை திமுக உறுப்பினர்களாக சேர்ப்பதற்கு கட்சி விதிகளில் திருத்தம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக பொதுக்குழு கூட்டம் முதன்முதலாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்தில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் ஆக்கப்பணிகள், உள்ளாட்சி தேர்தல், கட்சியின் சட்ட திருத்தம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

DMK General Committee meeting...21 Fulfillment of Resolutions

இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

* நாடாளுமன்ற, சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி தேடித்தந்த மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

* திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பதற்கு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

* மத்திய அரசு நிறுவனங்களில் 90% தமிழர்களை மட்டுமே நியமிக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றம்.

* ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ, 8 வழிச்சாலை, சேலம் இரும்பாலை உள்ளிட்ட பிரச்சனைகளை கண்டித்தும் தீர்மானம்.

* தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கோரி திமுக பொதுக்குழுவில் தீர்மானம்.

* கருணாநிதிக்கு சிறப்பான அருங்காட்சியகம் அமைக்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

* பொள்ளாச்சி வழக்கில் குண்டர் சட்டத்தில் ரத்து செய்யப்பட்டதற்கும், கோடநாடு வழக்குகளைக் கண்டித்தும் தீர்மானம். 

* 2020-ம் ஆண்டுக்குள் திமுக உட்கட்சி தேர்தலை நடத்தி முடிப்பது என தீர்மானம் நிறைவேற்றம்.

* வாக்குச்சாவடிக்கு 10 பேர் கொண்ட உட்குழு அமைக்கப்படும்.

* 10 ஊராட்சிகளுக்கு ஒரு ஒன்றிய கழகம் அமைப்பதற்கும்.

* இணையதளம் மூலம் உறுப்பினர்களை சேர்க்க விதிகளில் திருத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

* வெளிநாடு வாழ் இந்தியர்களை திமுகவில் உறுப்பினர்களாக சேர்க்க விதிகளில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

* உள்ளாட்சி தேர்தல் நடக்கும் வரை தற்போதைய நிர்வாகிகள் அதே பொறுப்பில் நீடிப்பது

* இளைஞரணி உறுப்பினர்களுக்கான வயது வரம்பு 18 வயதில் இருந்து 35 வயது வரை என நிர்ணயித்து தீர்மானம்.

* மருத்துவர் அணி என்பதை மருத்துவ அணி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

* பருவநிலை மாற்றங்கள் தொடர்பாக மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.

* நாடு முழுவதும் நதி நீர் இணைப்பு திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும்.

* உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்திட வேண்டும்.

* அழிவு சக்திகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து இரும்பு கரம் கொண்டு அடக்கிட வேண்டும்

* அதிமுக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Follow Us:
Download App:
  • android
  • ios