Asianet News TamilAsianet News Tamil

இறுதியானது திமுக கூட்டணி !! எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ?

8 கட்சிகள் இணைந்துள்ள திமுக கூட்டணியில் தொகுதி  பங்கீடு கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது ஒவ்வொரு  கட்சிக்கும் எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது என்ற உத்ததேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
 

dmk allaince finished
Author
Chennai, First Published Mar 5, 2019, 7:20 AM IST

வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழகத்தில்  அதிமுக மற்றும் திமுக ஆணிய கட்சிகள் வலுவான கூட்டணியை அமைத்துள்ளன.

அதிமுக, பாஜக, பாமக, என்.ஆர்,காங்கிரஸ், புதிய நீதி கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. அந்த கூட்டணியில் இன்று தேமுதிக இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போல் திமுக  கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகிய 8 கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

dmk allaince finished

ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு  புதுச்சேரி உள்பட  10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தலா 2 தொகுதிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவைகளுக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தெரிகிறது.

dmk allaince finished

இதையடுத்து  தமிழகத்தில் தி.மு.க. 19 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. மேலும், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் தி.மு.க. சின்னமான உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிடும் என்று தெரிகிறது. சின்னத்தின் அடிப்படையில் பார்க்கும்போது, 25 தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுகிறது.

dmk allaince finished

மேலும், தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது உத்தேச பட்டியல் அடிப்படையில் தெரியவந்துள்ளது. அதன்படி  தி.மு.க. வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை, அரக்கோணம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், நீலகிரி, கோவை, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய தொகுதிகளிலும், .

காங்கிரஸ் கட்சி  புதுச்சேரி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், ஆரணி, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளிலும் போட்டியிட உள்ளது..

ம.தி.மு.க.  திருச்சி மற்றும்  ஈரோடு தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி  மதுரை மதுரை மற்றும் திருப்பூர் தொகுதிகளிலும் போட்டியிட உள்ளன.

dmk allaince finished

இந்திய கம்யூனிஸ்டு கட்சி  நாகப்பட்டினம், தென்காசி தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி  சிதம்பரம் மற்றும்  விழுப்புரம் தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் ராமநாத புரம் தொகுதியிலும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி  பொள்ளாச்சியிலும், இந்திய ஜனநாயக கட்சி  கள்ளக்குறிச்சி தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக தெரிகிறது. ஒரு வேளை கடைசி நேர மாறுதலாக ஒரு சில தொகுதிகள் மாற்றம் செய்யப்படலாம் எனவும் திமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow Us:
Download App:
  • android
  • ios