Asianet News TamilAsianet News Tamil

'இவங்களோடதான் இனி நம்ம கூட்டணி...' முடிவை உறுதி செய்த விஜயகாந்த்..!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை பற்றி அறிவிக்காமல் இழுத்தடித்து வரும் தேமுதிக தலைவர் யாருடன் கூட்டணி என்கிற முடிவை உறுதி செய்து விட்டதாக அவரது கட்சியினர் தகவலை வெளியிட்டு வருகின்றனர். 

dmdk alliance with admk
Author
Tamil Nadu, First Published Mar 3, 2019, 4:16 PM IST

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணியை பற்றி அறிவிக்காமல் இழுத்தடித்து வரும் தேமுதிக தலைவர் யாருடன் கூட்டணி என்கிற முடிவை உறுதி செய்து விட்டதாக அவரது கட்சியினர் தகவலை வெளியிட்டு வருகின்றனர். dmdk alliance with admk

அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, புதிய தமிழகம், உள்ளிட்ட கட்சிகள் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீட்டில் உடன்படிக்கை செய்து கொண்டுள்ள நிலையில் தேமுதிக இன்னும் முடிவை அறிவிக்காமல் இருக்கிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கி வந்த தேமுதிக இழுத்தடித்து வருகிறது. இதனால், விஜயகாந்தை திமுக கூட்டணிக்கு இழுக்கும் வகையில், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்து அரசியல் பேசியது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.

 dmdk alliance with admk

அடுத்து ரஜினிகாந்த் விஜயகாந்தை சந்தித்தார். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விஜயகாந்தை சந்தித்தது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதிமுக கொடுக்க தயாரான 5 தொகுதிகள் ஒரு ராஜ்யசபா சீட் ஆஃபரை தேமுதிக பெற்றுக்கொள்ள சம்மதித்ததாக தகவல்கள் வெளியாகின. ஆகையால் காலையோ, அல்லது மாலையோ கூட்டணியை விஜயகாந்த் அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில், திடீர் திருப்பமாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விஜயகாந்தை சந்தித்து அரசியல் பேசியதாக கூறியது சலசலப்பை ஏற்படுத்தியது. dmdk alliance with admk

இதனைத் தொடர்ந்து வரும் 5ம் தேதி கூட்டணி குறித்து ஆலோசிக்க கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதனால் கூட்டணியின் மாற்றம் ஏற்படுமா என்கிற சந்தேகம் எழுந்தது. அதிமுக தொடர்ந்து தேமுதிகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வர அதிமுக முயற்சி செய்து வருகிறது. பாஜகவும் அதிமுக கூட்டணியில் இணைய நட்பு அடிப்படையில் தேமுதிகவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால், தேமுதிக இறங்கி வந்து கொண்டிருக்கிறது. dmdk alliance with admk

பாஜக பல ஆண்டுகளாக நட்பு கட்சியாக இருந்து வருவதால் அதிமுகவுடன் தேமுதிக சேர்வதை விஜயகாந்த் உறுதி செய்து விட்டதாக கட்சியினர் கூறுகின்றனர். ஒரு சில முக்கிய தொகுதிகளில் களமிறங்குவது மட்டுமே சிக்கலாக உள்ள நிலையில், அதையும் சரி செய்து தருவதாக அதிமுக ஒப்புக்கொண்டுள்ளதால் வரும் 5ம் தேதி அதிமுக- தேமுதிக கூட்டணி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்கிறார்கள் அதிமுகவினர். 

Follow Us:
Download App:
  • android
  • ios