Asianet News TamilAsianet News Tamil

தெறிக்க விடனும்... ஆல் ஏரியாவிலும் அதகளம் பண்ணனும்! திமுக தொழில்நுட்ப அணிக்கு "சமூக வளைதள பயிற்சி" !

DIGITAL ASSETS WORKSHOP training in dmk
DIGITAL ASSETS WORKSHOP training in dmk
Author
First Published Jul 19, 2018, 4:18 PM IST


இன்றைய சூழலில் Twitterயிலும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி, இணையதள அணிகளை மிஞ்ச ஆட்கள் இல்லை என எல்லோருக்கும் தெரியும் அப்படி இருந்தாலும் இனி யாரும் திமுகவை எதிர்த்து பதிவு போட்டால் ஒட்டு மொத்தமாக தெறிக்கவிடனும் என்பதற்காக திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக தொண்டர்களுக்கு ”சமூக வலைதள பயிற்சி பட்டறை” பயிற்சி அளிக்கப்பட்டதாம் 

பயிற்சியின் தொடக்கமே #WecomeStalin என்ற டே(டா)க்குடனே ஆரம்பிக்கப்பட்டது, டிவிட்டரில் #WelcomeStalin மிகப்பெரிய வெற்றிப்பெற காரணம் தகவல் தொழில்நுட்ப அணியைத்தாண்டி "திமுக இணையதள நண்பர்கள்" பங்கு அதிகம் என்றுதான் பேசப்பட்டது… அவர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது… 

தகவல் தொழில்நுட்ப அணியில் இருப்பவர்களின் முகநூல் கணக்கு, டிவிட்டர் கணக்குகள் மற்றும் வாட்சப் பகிர்வுகள் அனைத்தும் #கழகத்தின்_சொத்தாகும் இவ்வணியைவிட்டு விலகினாலோ? இவ்வணிக்கான பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட பிறகோ? தான் அது அவரவர்களின் தனிசொத்தாக ஏற்க்கப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது.

தகவல் தொழில்நுட்ப அணி வருவதற்கு முன்பாகவே இணையதளத்தில் திமுகவின் பங்கு அதிகம், இன்றைக்கு திமுக தகவல் தொழில்நுட்ப அணியாக இருந்தாலும், திமுக இணையதள அணியாக (இணையதள அணி உருவாக்கப்படவில்லை என்றாலும் இணையதள நண்பர்களின் அணி) இருந்தாலும் எந்தக் கட்சியிலும் இல்லாததைவிட பெரிய எழுச்சி, திமுகவின் இவ்விரு அணிகளின் பணி பெரியது என்றே பேசப்பட்டது. 

தகவல் தொழில்நுட்ப அணியின் அடுத்த கட்டமாக 32மாவட்டங்களுக்கும் தலா ஒரு பக்கம்(PAGE) கொடுக்கப்பட இருக்கிறது. அதேபோல் 234 தொகுதிகளுக்கும் பக்கங்கள் கொடுக்கப்படும், அதில் திமுகவின் #கடமை #கண்ணியம் #கட்பாடு இருந்தாக வேண்டும் என்று சொல்லப்பட்டது… அந்தபக்கங்களில் உண்மைச் செய்திகள் மட்டுமே இருக்கும், அதில் மற்ற கட்சி தகவல் தொழில்நுட்ப அணியினரைப் போன்று பொய்யான தகவல்கள் இடம்பெறக் கூடாதென்றும் அதை தலைமை கண்காணிக்கும் என்றும் பேசப்பட்டது… வேறு கட்சியினர் செய்திகளின் உண்மைதன்மையை அறிய அப்பக்கங்களை பார்க்க உதவும் வகையில் இருக்கவேண்டுமென பயிற்சி பட்டறையில் பேசப்பட்டது… 

முதலாவதாக டிவிட்டர்(TWITTER) பயன்பாடு,
2வது முகநூல்(FACEBOOK),
அடுத்ததாக வாட்சப்(What'sApp) பயன்பாடுகளைப்பற்றி பேசப்பட்டது… 

#டிவிட்டர்(TWITTER):-
                  டிவிட்டர் பதிவுகளால் பெரிய அளவில் மக்களுக்கு நன்மைச் செய்திகளை கொண்டுச் செல்ல உதவும், இதில் கழகத்தின் கொள்கைகளை அனைவரும் அறிய உதவதற்கு நம் அணிகளின் பணி இருக்க வேண்டும்… அதேபோல் முகநூலில் பதிவுகள் குறிப்பிட்ட எல்லைவரை செல்லும் ஆனால் டிவிட்டர் எல்லை இல்லாதது, அனைத்து சமுகத்தினரையும் சென்றடையும் அதில் சிறந்த பண்பாளர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் வல்லுநர்கள் விவாதிக்க உதவும்…

#முகநூல்(FACEBOOK):-
                  மேலே சொல்லப்பட்டதைப் போல் முகநூல் பக்களைக் கொண்டும், தனிநபர் முகநூல் கணக்குகளைக் கொண்டும் கழகத்தின் கொள்கைகளை கொண்டு செல்ல விவாதிக்கப்பட்டது… 

#வாட்சப்(What'sApp):-
                வாட்சப் குரூப்புகளைக் கொண்டு கழகத்தின் செய்திகள் எடுத்துச்செல்ல மிகப்பெரிய திட்டம் பேசப்பட்டு இருக்கிறது… 

இன்றைய சூழலில் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மட்டுமே வெளிப்படையானதாக இருக்கிறது… அதேபோல் அணியின் அனைத்து திட்டங்களும் வெளிப்படையாக பொதுவெளியில் பேசமுடியாது… 

இறுதியாக டிவிட்டர் நிறுவனத்தை சார்ந்தவர்கள் மாலைநேர வேலையில் வந்த பிற்பாடு Twitter Demo செய்து காட்டப்பட்டது… 

குறிப்பு: இன்றைய சூழலில் Twitterயிலும் திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி, இணையதள அணிகளை மிஞ்ச ஆட்கள் இல்லை என்பது மட்டுமே நிதர்சனம்… இருந்தும் Twitterல் கழகத்தின் கொள்கைகளை எடுத்துச்செல்ல நிறைய பணிகள் இருப்பதால் அதற்கான பயிற்சி வேண்டியே இந்த "சமூக வளைதள பயிற்சி பட்டறை" (DIGITAL ASSETS WORKSHOP)

Follow Us:
Download App:
  • android
  • ios