Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் மோடியின் அட்வைசரையே தூக்கிய திவாகரன் மகன்... கிடைக்குமா எம்.பி., சீட்..?

பிரதமர் மோடியின் ஆலோசகர் ஓம் பகதூர் மாத்தூரை அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளரான திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் சந்தித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார். 

dhivakaran political move son jai anand met  om bahadhoor mathoor
Author
Tamil Nadu, First Published Feb 9, 2019, 5:30 PM IST

பிரதமர் மோடியின் ஆலோசகர் ஓம் பகதூர் மாத்தூரை அண்ணா திராவிடர் கழக இளைஞர் அணி செயலாளரான திவாகரன் மகன் ஜெய் ஆனந்த் சந்தித்து அதிர்ச்சியை கிளப்பி உள்ளார்.

 dhivakaran political move son jai anand met  om bahadhoor mathoor

பாஜக தமிழக மேலிடப் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியூஸ் கோயலை சசிகலாவின் சகோதரர் திவாகரனின் மகன் ஜெயானந்த்  நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். அண்ணா திராவிடர் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார் திவாகரன். அந்தக் கட்சியின் இளைஞரணி தலைவராக திவாகரனின் மகன் ஜெயானந்த் இருந்து வருகிறார். தினகரனுடன் ஏற்பட்ட கடும் மோதலை அடுத்து திவாகரன் எடப்பாடியுடன் கை கோர்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திவாகரன் தரப்பினர் இத்தனை நாளும் அமைதியாக இருந்தனர்.

dhivakaran political move son jai anand met  om bahadhoor mathoor

இந்நிலையில், டெல்லியில் நேற்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை ஜெய் ஆனந்த் திடீரென சந்தித்து பேசினார். தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழ்நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடியில் ஆலோசகரான ஓம் பகதூர் மாத்தூரை ஜெய் ஆனந்த் சந்தித்து பேசினார். அப்போது மக்களவை தேர்தலில் தங்களுக்கும் அதிமுக -பாஜக கூட்டணியுஇல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தேர்தலில் போட்டியிட சீட் ஒதுக்குவது குறித்தும் மோடியை சந்திக்க ஏற்பாடு செய்யுமாறும் ஜெய் ஆனந்த் கேட்டுக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. dhivakaran political move son jai anand met  om bahadhoor mathoor

மக்களவை தேர்தலில் போட்டியிட ஜெய் ஆனந்த் காய் நகர்த்தி வருவதாகவும், அந்தக் கோரிக்கையுடன் அவர் டெல்லியை சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. ஓம் பகதூர் மாத்தூரை ஜெய் ஆனந்த் சந்தித்துள்ள நிலையில் எம்.பி.சீட் கிடைக்குமா என்பது இனிவரும் காலங்களில் தெரிய வரும்.

Follow Us:
Download App:
  • android
  • ios