Asianet News TamilAsianet News Tamil

விமான டிக்கெட்டை மிஞ்சும் பஸ் டிக்கெட்... தீபாவளியை கொண்டாடும் ஆம்னி பஸ் உரிமையாளர்கள்... திண்டாடும் பயணிகள்..!

பண்டிகை காலங்களில் பயணிகளுக்கு திண்டாட்டமும் ஆம்னி பஸ் உரிமையாளருக்கு கொண்டாட்டமுமாய் அமைந்து விடுகிறது. 

Deepavali rush Monumental increase in omni bus fares
Author
Tamil Nadu, First Published Oct 23, 2019, 5:27 PM IST

தீபாவளி பண்டிகையை  கொண்டாட  சென்னையில் தங்கி உள்ள லட்சக்கணக்கான வெளி மாவட்டத்தினர் சொந்த ஊருக்கு படையெடுப்பார்கள்.  தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் 10,940 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  இருந்தும் அவசரம் கருதி பலரது விருப்பம் ஆம்னி பஸ்களாக மாறி விடுகிறது. Deepavali rush Monumental increase in omni bus fares

சென்னையிலிருந்து பல முக்கிய நகரங்களுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்து சேவைகளின் டிக்கெட் கட்டணம்  பல சந்தர்ப்பங்களில் சராசரி டிக்கெட் விலையை விட 100 மடங்கு உயர்ந்துள்ளது. சாதாரண நாட்களில் குறைந்தபட்ச டிக்கெட் விலையிலும், வெள்ளிக்கிழமை தீபாவளிக்கு பெரும்பாலான மக்கள் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகையில் அதிகபட்சமாக டிக்கெட்டை உயர்த்தி விடுகிறார்கள்.

 Deepavali rush Monumental increase in omni bus fares

சில சந்தர்ப்பங்களில், தீபாவளி வார இறுதியில் கோவை மற்றும் மதுரைக்கான  டிக்கெட்டுகள்  விமான டிக்கெட்டுகளை விட அதிகமாக உள்ளன.  இது ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாக உள்ளது. பண்டிகை காலங்களில், பல பாதுகாப்பு அல்லது ஒழுங்குமுறை விதிமுறைகளை பின்பற்றாமல் பல ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகின்றன. பல சுற்றுலா பேருந்துகள் ஒரே இரவில் பண்டிகை காலங்களில் ஆம்னி பஸ்களாக மாறுகின்றன.

இதையும் படியுங்கள்:- முரசொலி பஞ்சமி நிலம்... திமுகவுக்கு நோட்டீஸ்... வெறுப்பில் ராமதாஸை விளாசும் மு.க.ஸ்டாலின்..!

புதிய மோட்டார் வாகனங்கள் (திருத்தம்) சட்டத்தின்படி, இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு விதிமுறைகளை மீறியதற்காக கடுமையான அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் விதிமுறைகளை மீறி இயக்கி வருகின்றனர். ஆனால் அவர்கள் தண்டனையின்றி தப்பித்து  வருகின்றனர். ஒப்பந்த வண்டிக்கான டிக்கெட் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம் இல்லாததால், விலையை கட்டுப்படுத்துவதில் நிர்வாகத்திற்கு சில தடைகள் இருக்கிறது. பண்டிகை காலங்களில் முக்கியமாக ஆபரேட்டர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து அதிக கட்டணம் வசூலிப்பதை சரி பார்க்க சோதனை நடத்துவதற்காக 60 குழுக்களையும்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளனர்.Deepavali rush Monumental increase in omni bus fares

தீபாவளி வார இறுதியில் அரசு பஸ்களின் சேவைகளின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்த உள்ளனர். தனியார் பஸ்களில் பயணம் செய்வதற்கு பதிலாக அரசு பஸ்சை பயன்படுத்துமாறு பொதுமக்களை அரசு ஊக்குவித்து வருகிறது.

இதையும் படியுங்கள்:- ஒரே ஒரு ட்விட்... சாதாரண ஜவுளிக்கடைக்காரரை லட்சாதிபதியாக்கிய ஹெச்.ராஜா..!

Follow Us:
Download App:
  • android
  • ios