Asianet News TamilAsianet News Tamil

நாங்குநேரியில் தடுத்து நிறுத்தப்பட்ட வசந்தகுமார்..! காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதன் உண்மை பின்னணி..!

நாங்குநேரி தொகுதியை பறிகொடுத்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வசந்தகுமாருக்கு நேரடியாக வந்த உத்தரவை தொடர்ந்தே அவர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டினார். இந்த நிலையில் தேர்தல் நாளன்று பூத் ஏஜென்டுகள் மற்றும் வாக்குப் பதிவு மைய முகவர்களுக்கு செட்டில்மென்ட் கொடுக்க வேண்டியது வசந்தகுமாரின் பொறுப்பு என்று கூறப்படுகிறது. அண்ணாச்சி, யாரும் கேட்ட உடன் அப்படியே தூக்கி கொடுத்துவிடுபவர் அல்ல.

Congress MP Vasanthakumar detained, released...True background
Author
Tamil Nadu, First Published Oct 22, 2019, 10:37 AM IST

நாங்குநேரி தொகுதியில் நேற்று பிற்பகலில் திடீரென வசந்தகுமார் தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு எம்பியாகிவிட்டார். இதனால் அவர் ராஜினாமா செய்தததை தொடர்ந்தே நாங்குநேரியில் இடைத்தேர்தல் நடைபெற்றது. நாங்குநேரி தொகுதியில் அவர் ஏற்கனவே எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். அந்த வகையில் நாங்குநேரி தொகுதியில் உள்ள காங்கிரஸ்கார்களுக்கு அவர் மிகவும் பரிட்சையம்.

Congress MP Vasanthakumar detained, released...True background

அதோடு மட்டும் அல்லாமல் நாங்குநேரி, நெல்லை பகுதிகளின் காங்கிரஸ் நிர்வாகிகள் பெரும்பாலும் வசந்தகுமாரின் ஆதரவாளர்கள். எனவே தான் தேர்தல் பொறுப்பாளராக அவரை காங்கிரஸ் கட்சி நியமித்தது. நாங்குநேரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனுக்கும் – வசந்தகுமாருக்கும் இடையே கடந்த காலங்களில் கன்னியாகுமரியில் போட்டியிடுவது தொடர்பாக மோதல் இருந்தது வந்தது. ஆனால் அதனை எல்லாம் மறந்து இருவரும் நாங்குநேரியில் பணியாற்றி வந்தனர்.

Congress MP Vasanthakumar detained, released...True background

நாங்குநேரி தொகுதியை பறிகொடுத்துவிடக்கூடாது என்று காங்கிரஸ் மேலிடத்தில் இருந்து வசந்தகுமாருக்கு நேரடியாக வந்த உத்தரவை தொடர்ந்தே அவர் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டினார். இந்த நிலையில் தேர்தல் நாளன்று பூத் ஏஜென்டுகள் மற்றும் வாக்குப் பதிவு மைய முகவர்களுக்கு செட்டில்மென்ட் கொடுக்க வேண்டியது வசந்தகுமாரின் பொறுப்பு என்று கூறப்படுகிறது. அண்ணாச்சி, யாரும் கேட்ட உடன் அப்படியே தூக்கி கொடுத்துவிடுபவர் அல்ல.

அதனால் தான் நேற்று வாக்குச் சாவடி வாரியாக சென்று எத்தனை ஏஜென்டுகள் உள்ளனர். காங்கிரஸ்காரர்கள் எத்தனை பேர், திமுகவினர் எத்தனை பேர் என அவரே நேரடியாக ஆய்வு செய்துள்ளார். ஒன்று இரண்டு இடங்களில் இப்படி திடீர் ஆய்வு மேற்கொண்டால் உண்மை நிலவரம் தெரிந்துவிடும் என்றே அவர் அப்படி செய்ததாக கூறுகிறார்கள். மேலும் இரண்டு வாக்குச் சாவடிகளுக்குள் அவர் சென்ற போது அங்கிருந்த போலீசார் வெளியூர் நபர்கள் உள்ளே வரக்கூடாது என்று அன்பாக கூறியுள்ளனர்.

Congress MP Vasanthakumar detained, released...True background

அதனை சட்டை செய்யாமல் வசந்தகுமார் உள்ளே சென்றுள்ளார். மேலும் சில இடங்களுக்கும் அவர் செல்ல உள்ளதாக தகவல் வரவே அவரை தடுத்து நிறுத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்தே அவரை போலீசார் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். அதோடு சொந்த ஜாமீனிலும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios