Asianet News TamilAsianet News Tamil

மு.க.ஸ்டாலின் பேச்செல்லாம் செல்லாது செல்லாது... ராகுல் காந்தி அப்செட்!

மு.க.ஸ்டாலின் முந்திக் கொண்டு ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் எனமுன் மொழிந்தாலும் அந்தக் கருத்தை ஏற்க காங்கிரஸ் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் மறுத்துள்ளார்.
 

Cong., and coalition leaders are angry over M.K. Stalin
Author
Chennai, First Published Dec 19, 2018, 11:46 AM IST

மு.க.ஸ்டாலின் முந்திக் கொண்டு ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளர் எனமுன் மொழிந்தாலும் அந்தக் கருத்தை ஏற்க காங்கிரஸ் கூட்டணி கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் மறுத்துள்ளார்.

ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பு வரை காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக்குவதா? என எதிர்கட்சிகள் எதிர்பு தெரிவித்து வந்தன. ஏன் காங்கிரஸ் கட்சிக்குள்ளிருந்தே சிலர் தயக்கம் காட்டினர். இந்த நிலையில் ஐந்து மாநிலத் தேர்தல் நிலவரம் ராகுல் காந்திக்கு கைகொடுக்க காங்கிரஸ் கட்சியினர் ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்கிற முடிவுக்கு வந்தனர். Cong., and coalition leaders are angry over M.K. Stalin

இதனிடையே, கருணாநிதி சிலை திறப்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்றனர் அப்போது பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ’’ராகுல் காந்தியே வருக... நாட்டுக்கு நல்லாட்சி தருக. வரும் லோக்சபா தேர்தலில் ராகுலை எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக அனைவரும் ஏற்க வேண்டும் என பா.ஜ.,விற்கு எதிராக ஒன்றிணைந்துள்ள கூட்டணி கட்சிகளுக்கு கோரிக்கை விடுத்தார். ஸ்டாலினின் இந்த கருத்திற்கு கூட்டணி கட்சி தலைவர்கள் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் அதிருப்தியடைந்த கூட்டணி கட்சி தலைவர்கள் சிலர் காங்கிரஸ் கட்சி முதல்வர்கள் பதவியேற்ற விழாக்களில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர்.

 Cong., and coalition leaders are angry over M.K. Stalin

இந்நிலையில் ராகுல் முதல்வர் வேட்பாளர் எனக் கூறிய கருத்தை சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். ’ஸ்டாலின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து. கூட்டணி கட்சிகளின் கருத்து இல்லை. தனி ஒருவரின் கருத்து கூட்டணியின் கருத்து ஆக முடியாது. தற்போது நடந்து வரும் பா.ஜ., ஆட்சி வெளியேற்றப்பட வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். அதற்காக தான் இந்த கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பா.ஜ., விற்கு எதிரான கூட்டணியை உருவாக்க தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேசியவாத காங் தலைவர் சரத் பவார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என அனைவரும் முயற்சி செய்து வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

 Cong., and coalition leaders are angry over M.K. Stalin

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ராகுலை பிரதமர் வேட்பாளாராக ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கருத்து கூறியிருந்தார். கூட்டணிக் கட்சித் தலைவர்கள் தன்னை பிரதமர் வேட்பாளராகக் கருதாததால் ராகுல் காந்தி கடும் அப்செட்டில் இருப்பதாக கூறுகிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios