Asianet News TamilAsianet News Tamil

சிவசேனாவை உடைக்கும் வேலையைத் தொடங்கிய பாஜக…. உத்தவ் தாக்ரேவுக்கு எதிராக முதல் போர்க் கொடி !!

தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ்  கட்சிகளின் ஆதரவுடன் மகாராஷ்ட்ராவில்  ஆட்சி அமைக்க சிவசேனா தீவிர முயற்சி செய்து வரும் நிலையில்  அக்கட்சியை உடைக்கும்  வேலையை பாஜக தொடங்கியுள்ளது.
 

BJP ready to breake sivasena
Author
Mumbai, First Published Nov 6, 2019, 7:25 AM IST

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக - சிவசேனா கூட்டணி பெரும் பான்மையைப் பெற்றாலும், ‘யாருக்கு முதலமைச்சர்  பதவி?’ என்பதில், தகராறு  நடந்து கொண்டிருக்கிறது. தனது மகன் ஆதித்யா தாக்கரேவை முதலமைச்சர்க ஆக்கியே தீருவேன் என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தீவிரம் காட்டிவருகிறார். 

ஆனால் பாஜக-வோ அதனை விட்டுத்தருவதாக இல்லை.  இதனால், புதிய அரசு அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதையடுத்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சி அமைக்க சிவசேனா முயன்று வருகிறது. 

BJP ready to breake sivasena

இந்நிலையில், சிவசேனா தரப்பில் தானே எம்எல்ஏ-வான ஏக்நாத் ஷிண்டே-வைத் தான் முதலமைச்சராகக்க  வேண்டும் எனசிவசேனாவிலுள்ள ஒரு தரப்பினரே போஸ்டர் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

கடந்த 2004 முதல் எம்எல்ஏ-வாக இருந்து வரும் ஏக்நாத், தானே மாவட்டத்தில் தனி செல்வாக்கு படைத்தவர் என்று கூறப்படுகிறது. சிவசேனாவில் இருந்தாலும், முதலமைச்சர்  தேவேந்திர பட்நாவிஸ் உடன்நெருக்கமானவர். பொதுப்பணித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார்.

BJP ready to breake sivasena

அந்த வகையில், உத்தவ்தாக்கரே, பாஜக-வுக்கு ஆதரவாக நடந்து கொள்ளாவிட்டால், ஏக்நாத் ஷிண்டே, சிவசேனாவிலிருந்து விலகி, பாஜக-வில் சேருவார் என்று செய்திகள் வெளியாயுள்ளன.

ஏக்நாத் பின்னணியில் பாஜக-வே இருக்கிறது; சிவசேனாவுக்கு தலைவலியை ஏற்படுத்தும் வகையில், பாஜகதான் அவரை வைத்துக்காய் நகர்த்துகிறது என்றும் அந்தசெய்திகள் தெரிவிக்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios