Asianet News TamilAsianet News Tamil

திருவள்ளுவரை துருப்புச் சீட்டாக கையில் எடுத்த பாஜக "ஐடி" விங்..!! எதிர்கட்சிகளுக்கு பகிரங்க எச்சரிக்கை, பகீர் கிளப்பும் அரசியல் பின்னணி..!!

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவின் மாநிலத்தலைவர்,  சிடி.ஆர் விமல் குமார்,  தமிழக பாஜக தொழில்நுட்ப பிரிவினருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அதில் நிர்வாகிகள் அனைவரும் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (9 , 10-ஆம் தேதி)  தங்களது  இல்லங்களில் மற்றும் அலுவலகங்களில் உங்களுக்கு ஏற்றார்போல உள்ள பொது இடங்களில் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு திருவள்ளுவர் படத்தை வினியோகிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம்,  

bjp IT wing gave instruction to bjp social media caders to celebrate thiruvalluvar and also distribute valluvar photos to public
Author
Chennai, First Published Nov 6, 2019, 1:23 PM IST

தாய்லாந்துக்கு  சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி,  அங்கு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் "தாய்"  மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை வெளியிட்டார். அதைப் பாராட்டும் வகையில் தமிழக பாஜக தனது டுவிட்டர் பக்கத்தில் திருவள்ளுவர் காவி உடை அணிந்து திருநீறு பூசப்பட்டு ருத்ராட்சம் மாலை அணிந்துள்ளதைப்போல புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு  திமுக,  மதிமுக,  விடுதலை சிறுத்தைகள்,   கம்யூனிஸ்ட்,  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்பட்டுள்ளது.  திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமானவர் இல்லை , அவர் அனைவருக்கும் பொதுவானவர்.  பாஜக அவருக்கு காவி நிறம் பூசி  வள்ளுவருக்கு மத அடையாளம் புகுத்த பார்க்கிறது என பாஜகவின் பதிவிற்கு பலத்த எதிர்ப்பு காட்டி வருகின்றனர்.

bjp IT wing gave instruction to bjp social media caders to celebrate thiruvalluvar and also distribute valluvar photos to public

இச் சர்ச்சை கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்துவரும் நிலையில் , ஊடகங்களிலும் பெரும் விவாதமாக மாறிவருகிறது. அதே நேரத்தில் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைமீது  மை பூசி அவமரியாதை செய்யப்பட்டுள்ளது.  இச்செயலுக்கு பல தரப்பில் இருந்தும்  கண்டனக் குரல் எழுந்து வருகிறது. இந்நிலையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாஜக பல்வேறு வகையில் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இந்நிலையில். 

bjp IT wing gave instruction to bjp social media caders to celebrate thiruvalluvar and also distribute valluvar photos to public

தமிழக பாஜகவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவின் மாநிலத்தலைவர்,  சிடி.ஆர் விமல் குமார்,  தமிழக பாஜக தொழில்நுட்ப பிரிவினருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  அதில் நிர்வாகிகள் அனைவரும் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (9 , 10-ஆம் தேதி)  தங்களது  இல்லங்களில் மற்றும் அலுவலகங்களில் உங்களுக்கு ஏற்றார்போல உள்ள பொது இடங்களில் திருவள்ளுவர் படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு திருவள்ளுவர் படத்தை வினியோகிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம்,  இந்நிகழ்ச்சியை # thiruvalluvar திருவள்ளுவர் என்றார் ஹாஸ்ட்ராக் மூலம்  டுவிட்டர் மற்றும் முகநூலில் பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்,  அத்துடன் வரும் 2020 புத்தாண்டு நாட்காட்டிகளில் திருவள்ளுவர் படம் இடம்பெறுமாறு அச்சிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என பாஜக தொண்டர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios