Asianet News TamilAsianet News Tamil

விஜயகாந்துக்கு வீடு... அதிமுக- பாமகவுக்கு ஹோட்டல்... கூட்டணியால் குதூகலிக்கும் பாஜக!

தமிழகத்தில் கூட்டணியை உறுதி சென்னை வந்த பாஜக தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ப்யூஸ் கோயல் நேராக விஜயகாந்தை சந்திக்க செல்கிறார். 

BJP is keen on coalition
Author
Tamil Nadu, First Published Feb 19, 2019, 1:14 PM IST

தமிழகத்தில் கூட்டணியை உறுதி சென்னை வந்த பாஜக தமிழக பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான ப்யூஸ் கோயல் நேராக விஜயகாந்தை சந்திக்க செல்கிறார். BJP is keen on coalition

வரும் மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் பாமக இணைவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. கூட்டணிக்காக பேச்சுவார்த்தையை சென்னை கிரவுண் பிளாஸா ஹோட்டலில் ஓ.பி.எஸ், ஈபிஎஸ் மற்றும் அதிமுக முக்கிய அமைச்சர்கள் மேற்கொண்டு வருகின்றனர். காலையில் பாமகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. BJP is keen on coalition

இந்நிலையில், இன்று தேமுதிகவுடன் கூட்டணி குறித்து பேசி இறுதி முடிவெடுக்கப்பட உள்ளது. இதற்காக டெல்லியிருந்து அமித்ஷாவும், தமிழக தேர்தல் பொறுப்பாளரும் சென்னை வர இருந்தனர். இந்நிலையில் அமித்ஷா தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். தனி விமானம் மூலம் சென்னை வரும் ப்யூஸ் கோயல், கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் கிரவுண் பிளாசா ஹோட்டலுக்குச் செல்லாமல் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டிற்கு செல்ல இருக்கிறார். BJP is keen on coalition

பலகாலமாக தேமுதிக பாஜகவுடன் கூட்டணி அமைத்து நட்பு கட்சியாக இருந்து வருகிறது. அத்துடன் விஜயகாந்த் வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து திரும்பியுள்ள நிலையில், விஜயகாந்த் உடல்நலம் குறித்து கேட்டறியும் பொருட்டு விமான நிலையத்தில் இருந்து ப்யூஸ் கோயல் விஜயகாந்தை சந்திக்க இருக்கிறார். கூட்டணிப் பேச்சுவார்த்தையை விஜயகாந்த் வீட்டிலேயே நடத்தின் முடிக்கவும் திட்டமிட்டுள்ளனர். அதன் பிறகு பியூஸ் கோயல் சென்னை நந்தனம் அருகே உள்ள கிரவுன் பிளாஸா ஹோட்டலுக்கு வர இருக்கிறார். 
தமிழகத்தில் வலுவான கூட்டணியை அமைத்து விட்டதால் குதூகலிக்கிறார்கள் பாஜக நிர்வாகிகள். 

Follow Us:
Download App:
  • android
  • ios