Asianet News TamilAsianet News Tamil

15 தொகுதிகளில் அதிமுகவுக்கு ஆட்டம் காட்டும் அமமுக... இறங்கியடிக்கத் தயாரான டி.டி.வி..!

 டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ள 24 வேட்பாளர் பட்டியலில் 15 தொகுதிகளில்  அதிமுகவுடன் போட்டியிடுக்கிறது. 
 

AMMK-AIADMK 15 Conflict in the constituencies ..!
Author
Tamil Nadu, First Published Mar 17, 2019, 12:47 PM IST

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் அதிமுக- திமுக கூட்டணிகளுக்கு சிம்மசொப்பனமாக கருதப்படும் டி.டி.வி.தினகரனும் தனது கட்சியின் முதற்கட்ட வேட்பாளர்களை அறிவித்துள்ளார். டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ள 24 வேட்பாளர் பட்டியலில் 15 தொகுதிகளில்  அதிமுகவுடன் போட்டியிடுக்கிறது.

 AMMK-AIADMK 15 Conflict in the constituencies ..!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல பிரிவுகளாக பிரிந்தது. அதில் அமமுக தனிப்பெரும்பான்மை கட்சியாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெறும் பொதுத்தேர்தல் என்பதால் அதிமுக தொண்டர்கள் யார்பக்கம் என்கிற கேள்விக்கு இந்தத் தேர்தலில் விடை தெரிந்து விடும். ஆகையால் அதிமுக- அமமுக இடையே பெரும்பலப்பரிட்சையாக இந்தத் தேர்தல் அமையும் என்பதில் சந்தேகமில்லை. AMMK-AIADMK 15 Conflict in the constituencies ..!

அதிமுக - திமுக இரு கட்சிகளும் 39 தொகுதிகளில் 8 தொகுதிகளில் மட்டுமே நேரடியாக மோதுகின்றன. ஆனால், அமமுகவும், அதிமுகவும் டி.டி.வி அறிவித்துள்ள முதல் கட்ட பட்டியல் படி 15 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. AMMK-AIADMK 15 Conflict in the constituencies ..!

அதன்படி 1.திருவள்ளூர், 2. தென்சென்னை, 3.காஞ்சிபுரம்,  4.நாமக்கல் 5. ஈரோடு, 6. சேலம், 7.சிதம்பரம், 7 மயிலாடுதுறை, 8. பெரம்பலூர், 
10. நாகபட்டினம், 11 மதுரை, 12 திருநெல்வேலி,  13 நீலகிரி, 14 திருப்பூர், 15 பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக- அமமுக இடையே போட்டி நிலவுகிறது. அதிமுக கூட்டணியில் மீதமுள்ள 9 தொகுதிகளில் ஸ்ரீபெரும்புதூர், விழுப்புரம் ஆகிய இரு தொகுதிகளில் பாமகவுடன் போட்டியிடுகிறது. திருச்சியில் தேமுதிகவுடன் அமமுக களமிறங்க உள்ளது.  தஞ்சாவூரில் தமாகவுடனும் சிவகங்கையில் பாஜகவுடனும்,  தென்காசியில் புதியதமிழகம், கோவையில் பாஜகவுடன் அமமுக போட்டியிட உள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios