Asianet News TamilAsianet News Tamil

இந்தியா அடிச்ச அடில 250 தீவிரவாதிகள் செத்துட்டாங்க…. அடித்து சொல்லும் அமித் ஷா !!

பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப் படைகள் நடத்திய அதிரடி தாக்குதலில், 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாஜக தேசிய தலைவர்  அமித் ஷா தெரிவித்துள்ளார்.

amitha speech about attack on pakistan
Author
Delhi, First Published Mar 5, 2019, 9:18 AM IST

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள, ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத முகாம் மீது, இந்திய  விமானப் படை விமானங்கள் நடத்திய  தாக்குதலில் , 350  தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 
ஆனால், இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்பது குறித்து, மத்திய அரசோ, விமானப் படையோ, பாஜகவே இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.

amitha speech about attack on pakistan

ஆனால் இந்த தாக்குதலில் யாருமே கொல்லப்படவில்லை என சர்வதேச செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்ருந்தன. இதையடுத்து காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், இந்த தாக்குதலில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற விவரத்தினை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று வலியிறுத்தி வருகின்றனர், மேலும் அதற்கு ஆதாரம் உள்ளதா எனவும் கேள்வி எழுப்பி இருந்தனர்,

amitha speech about attack on pakistan

இந்நிலையில், குஜராத்தில், நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, பாஜக தலைவர், அமித் ஷா ஜம்மு - காஷ்மீர் மாநிலம், யூரியில், ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தான்  ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள, பயங்கரவாத முகாம்கள், 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் துல்லிய தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டன.

amitha speech about attack on pakistan

தற்போது, புல்வாமாவில் நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானில் உள்ள  பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதில், 250க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என தெரிவித்தார்.

பாகிஸ்தான் ஏற்கனவே, நம் வீரர்களின் தலையை துண்டித்தும், உடலை சேதப்படுத்தியும், அட்டூழியம் செய்துள்ளது. ஆனால், தற்போத, பிடிபட்ட நம் விமானப்படை அதிகாரியை உடனடியாக ஒப்படைத்துள்ளது. மிகவும் உறுதியான, அதிரடி நடவடிக்கைகளை மோடி எடுப்பார் என்பதால் தான், பாகிஸ்தான், இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என பாராட்டிப் பேசினார்.. 

amitha speech about attack on pakistan

இந்திய விமானப் படை தாக்குதல் நடத்தியதற்கான ஆதாரங்களை காட்டும்படி, எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. உங்களால் மோடியின் திறமைக்கு முன் போட்டியிட முடியாது. குறைந்தபட்சம், ராணுவத்துக்கு ஆதரவாக, அமைதியாக இருக்க வேண்டும் என்றும் அமித்ஷா கேட்டுக் கொண்டார். 

Follow Us:
Download App:
  • android
  • ios