Asianet News TamilAsianet News Tamil

மூன்றாவது அணியில் அதிமுக !! சந்திர சேகரராவின் புது முயற்சி !! பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க இபிஎஸ் – ஓபிஎஸ் அதிரடி திட்டம் !!

காங்கிரஸ் – பாஜக அல்லாத மூன்றாவது அணியை அமைக்க தெலங்கானா முதலமைச்சர் சநதிரசேகரராவ் தீவிர முயற்சி எடுத்து வரும் நிலையில் , அந்த அணிக்குள் அதிமுகவை கொண்டுவர அவர் தனது எம்.பி.க்கள் மூலம் அதிமுக எம்பிக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

admk in third front
Author
Chennai, First Published Dec 27, 2018, 8:18 AM IST

தெலங்கானா சட்டப் பேரவைத் தேர்தல் நடப்பதற்கு முன்பே சென்னை வந்த அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ். கருணாநிதியின் உடல்நிலை குறித்து விசாரித்துவிட்டு மூன்றாவது அணி அமைப்பது தொடர்பாக  ஸ்டாலினிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பின்னர் அவர் தேர்தலில் பிஸியாகிவிட்டார். அதேநேரத்தில் காங்கிரஸ் – திமுக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் தேர்தலில் ஜெயித்து மீண்டும் தெலங்கானாவின் முதலமைச்சரான சந்திரசேகர ராவ் தற்போது மீண்டும் மூன்றாவது அணியை அமைக்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளார்.

admk in third front

இதற்காக, அவர் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, முக்கிய தலைவர்களை சந்தித்து, பேச்சு நடத்தி வருகிறார். இதன் முதல் கட்டமாக ஒடிசா முதலமைச்சர்  நவீன் பட்நாயக், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரை, தெலுங்கானா முதலமைச்சர்  சந்திரசேகர ராவ், சந்தித்து மூன்றாவது அணி குறித்து ஆலோசனை நடத்தினார். வரும் 6 ஆம் தேதி சந்திரவேகர ராவ், அகிலேஷ் யாதவை சந்தித்த்துப் பேச உள்ளார்.

அடுத்தகட்டமாக, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர், மாயாவதியை சந்தித்து பேசவும், சந்திரசேகர ராவ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இந்நிலையில்தான் அ.தி.மு.க.,வை, மூன்றாவது அணியில் இடம் பெறச் செய்வதற்கான முயற்சியில், தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இறங்கியுள்ளார் என தெரிகிறது.

admk in third front

இது குறித்து இபிஎஸ் -ஓபிஎஸ் என இருவரையும் சந்தித்துப் பேச, தனது எம்.பி.,க்கள் வழியாக, துாது அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.  இந்த கூட்டணியால், பெரிய அளவில் சாதிக்க முடியும் என்றும், அவர் கணக்கு போடுகிறார்.

ஏறகனவே பாஜக - அ.தி.மு.க., இடையே, கூட்டணி பேச்சு துவங்கி உள்ளது. இது தொடர்பாக டெல்லியில் மத்திய அமைச்சர்கள், அருண்ஜெட்லி, நிர்மலா சீதாராமன் ஆகியோரை தமிழக அமைச்சர்கள்  அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர், சந்தித்து முதல்கட்ட ஆலோசனை நடத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் பாஜக – அதிமுக கூட்டணிக்கு தம்பிதுரை உள்ளிட்ட, எம்.பி.,க்கள் சிலர், முட்டுக்கட்டை போடுவதாக தெரிகிறது. இதைப் பயன்படுத்தி , சந்திரசேகர ராவ், காய் நகர்த்த துவங்கி உள்ளார்.

admk in third front

இதற்காக, அதிமுக எம்.பி.க்களிடம் தெலங்கானா எம்.பி.க்கள் பேசிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர்கள் மூலம்  இபிஎஸ் – ஓபிஎஸ் இருவரையும் சந்திரசேகர ராவ் சந்தித்து  பேச உள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதேநேரத்தில் இந்த சந்திப்பை எடப்பாடியும் விரும்புவதாகவும் இதன் மூலம் பாஜகவுடனானான கூட்டணி பேச்சு வார்த்தையில் சற்று அழுத்தம் கொடுக்க முடியும் என்றும் தெரிகிறது.

ஏற்கனேவே மத்திய பாஜக அரசு தமிழகத்தை புறக்கணித்து வருவதால் தமிழகத்தில்  அக்கட்சிக்கு எதிர்ப்பு வலுத்து வருவதால் இந்தக் கூட்டணி வேண்டாம் என்றும் அதிமுக தலைவர்கள் நினைக்கின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மூன்றாவது அணி அமைத்தால் அதற்கு, அ.தி.மு.க., தலைமை ஏற்கலாம் என்றும் ,  பா.ம.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளும், தி.மு.க., கூட்டணியில் சேர முடியாத கட்சிகளும், இங்கே வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து தமிழக அதிமுக தலைவர்களை சந்திர சேகர்ராவ் விரைவில் சந்திக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios