Asianet News TamilAsianet News Tamil

அதிமுக கூட்டணியில் பாமக தேமுதிகவுக்கு எத்தனை சீட்? திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளின் நிலைமை?

லோக்சபா தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உட்பட 12 தொகுதிகளை ஒதுக்கவும் ஒரு ராஜ்யசபா எம்.பி., 'சீட்' தரவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாமக - தேமுதிகவுக்கு மொத்தம் 10  சீட் கொடுத்து தங்களது கூட்டணியில் வளைக்க திட்டம் போட்டுள்ளது அதிமுக. அதற்கான அடுத்த கட்ட பேச்சு  வார்த்தை தொடங்க உள்ளதாம்.

ADMK Alliance dealing with PMK and DMDK
Author
Chennai, First Published Jan 13, 2019, 2:22 PM IST

நாடாளுமன்ற தேர்தலுக்கு, இன்னும் மூன்று மாதங்களே உள்ளன. மார்ச் முதல் வாரத்தில், தேர்தல் நடைபெறும் தேதிகள் அறிவிக்கப்படலாம். தமிழகத்தில், ஏப்ரல் அல்லது, மே மாதம் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. இந்தத் தேர்தலை சந்திக்க,  திமுக மற்றும் அதிமுக கூட்டணி என அடுத்த சுற்றுக்கு தயாராகி வருகிறது.

பழைய நண்பர்களுடன் மீண்டும், கூட்டணிக்கான கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன' என,  மோடி சொன்னதற்கு, பிஜேபியுடன் கூட்டணி அமைக்க மாட்டோம்' என, திமுக, தலைவர் ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். தி.மு.க., கூட்டணியில், காங்., இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லிம் லீக் இடம்பெறுவது உறுதியாகி உள்ளது. மதிமுக    விடுதலை சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை, கூட்டணிக்குள் நுழைய காத்திருக்கின்றன. 

திமுக கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு, 12 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கப்படுவது உறுதியாகி உள்ளது. அதில், புதுச்சேரியும் அடங்கும். தி.மு.க.,வுக்கு அழுத்தம் கொடுத்து, கூடுதல் தொகுதிகளை பெற, காங்., தலைவர் ராகுல் விரும்பவில்லை. பிரதமர் வேட்பாளராக, ராகுலை முன்மொழிந்து இதற்க்கு காரணம் என சொல்லப்படுகிறது.

ADMK Alliance dealing with PMK and DMDK

அதிமுக அணியை பொறுத்தவரையில், 'தமிழகத்திற்கு நல்லது செய்ய நினைக்கும் கட்சிகளுடன் கூட்டணி அமைப்போம்' என, எடப்பாடி பேசினார். அதேநேரத்தில், பாமக தேமுதிக போன்ற எந்த கட்சிகளுடன் கூட்டணி அமைப்பார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்ததை, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் வரவேற்றுள்ளார். பொங்கல் பரிசு உள்ளிட்ட, தமிழக அரசின் திட்டங்களையும், அதிமுகவை தடவிக்கொடுத்து நெருக்கம் காட்டி வரும்  ராமதாஸ்  எடப்பாடியை தாறுமாறாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார். 

ஆனால் எடப்பாடி பழனிச்சாமி ஒப்புதலுடன் தான், 'தமிழகத்தில், பா.ஜ.,வுடன் கூட்டணி இல்லை' என தம்பிதுரை அறிவித்துள்ளார். அதேபோல், அதிமுக செய்தி தொடர்பாளர் செல்வராஜ் அளித்த பேட்டியில், 'தமிழகத்தில், தாமரை என்ற செடியே இல்லை,  அப்புறம் எப்படி மலரும் என கேள்வி எழுப்பியுள்ளார். 

ADMK Alliance dealing with PMK and DMDK

எனவே, பிஜேபியை ஒதுக்கிவிட்டு அதிமுக தலைமையில், தலைமையில், பாமக - தேமுதிக உள்ளிட்ட, 11 கட்சிகளின் பிரமாண்ட  கூட்டணியை உருவாக்க ரகசிய பேச்சுக்கள் நடந்து வருகிறதாம்.  அதில், பாமகவுக்கு 10  தொகுதிகளும், தேமுதிகவுக்கு, 7 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம். அதிமுக 15 தொகுதிகளை எடுத்துக்கொண்டு மற்ற கட்சிகளுக்கு ஒன்று இரண்டு தொகுதிகளை ஒதுக்கித்த தர திட்டமாம்.

ஆமாம், பிஜேபியை கழட்டிவிட வேண்டிய காரணம் என்ன?

லோக்சபா தேர்தலில், அதிமுக, வுடன் கூட்டணி அமைக்க, பிஜேபி மேலிடம் காய் நகர்த்தி வந்தது. அதனால்,  எடப்பாடி அரசுக்கு, சில விஷயங்களில் சலுகை காட்டியது. அதேநேரத்தில் அமைச்சர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் வீடுகளில் வருமான வரி சோதனை மற்றும் சிபிஐ ரெய்டு நெருக்கடியும் கொடுத்தது.

ADMK Alliance dealing with PMK and DMDK

இதனால் பிஜேபியுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் அதிமுக., தள்ளப்பட்டது. சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தலில் பிஜேபி தோல்வி அடைந்ததும் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தை அதிமுக, மாற்றியது. இனி கூட்டணி தொடர்பான நிலைப்பாட்டில் டெல்லிக்கு பயப்படாமல் உறுதியான முடிவை எடுக்கவும் தயாராகி உள்ளது. 

அதுமட்டுமல்ல, 'கஜா' புயல் நிவாரண பணிகளுக்கு குறைவாக நிதி ஒதுக்கியது, பாதிக்கப்பட்ட பகுதிகளை  மோடி பார்க்காதது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு மீது அதிமுக அதிருப்தி அடைந்துள்ளது. இதற்கிடையில் தமிழக உளவுத்துறை சமர்ப்பித்த அறிக்கையில் 'அதிமுக பிஜேபி  கூட்டணி அமைந்தால் 2004 லோக்சபா தேர்தலை போல அந்த கூட்டணிக்கு ஒரு தொகுதி கிடைக்காதாம், இதனால் அந்த முடிவை அதிமுக கைவிட்டதாக சொல்கிறார்கள். மேலும் அதிமுக தனித்து போட்டியிட்டால் கொங்கு மண்டலத்தில் மட்டும் 10 தொகுதிகளில் வெற்றி பெற முடியும்  என உளவுத்துறை ரிப்போர்ட் கிடைத்ததாம்.

ADMK Alliance dealing with PMK and DMDK

எனவே 'தேர்தலுக்கு பின் பிஜேபிக்கு ஆதரவு கொடுக்கலாம், தேர்தலுக்கு முன் உங்களுடன் கூட்டணி வைக்க முடியாது' என  டெல்லியில் அமைச்சரை சந்தித்த அதிமுக முக்கிய புள்ளி சந்திப்பில் சொன்னாராம். பிஜேபியுடன் கூட்டணி சேராமல் இருந்தால் 5 சதவீத சிறுபான்மை சமுதாய ஓட்டுக்கள் திமுக பக்கம் போடுவதை தவிர்க்கலாம். திமுக, - காங்கிரஸ், கூட்டணிக்கு, 40க்கு 40 கிடைக்காமல் தடுக்கலாம்.

மத்திய அரசின் எதிர்ப்பு அலையில் அதிமுக சிக்கி சீரழியாமல் பார்த்துக்கொள்ளலாம் எடப்பாடி அண்ட் குரூப் பக்கா பிளான் போட்டுள்ளதாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios