Asianet News TamilAsianet News Tamil

அதிமுக கூட்டணியில் யார் ? யாருக்கு ? எந்தெந்த தொகுதிகள் ? வெளியான புதிய தகவல் !!

ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணியில் எந்தெந்த கட்சி எந்தெந்த  தொகுதிகளில் போட்டியிடுகிறது என்பது குறித்த உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது.

admk allaince candidate list ready
Author
Chennai, First Published Mar 13, 2019, 10:57 AM IST

நாடு முழுவதும் 17 ஆவது நாடாளுமன்றத்துக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் மே மாதம் 19 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளன. இதற்கான அறிவிப்பை கடந்த ஞாயிற்றுக் கிழமை தேர்தல் ஆணையம் அறிவித்தது.

தமிழகத்தில் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.

admk allaince candidate list ready

தமிழகத்தைப் பொறுத்தவரை அதிமுக தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மெகா கூட்டணியில் பாஜக, பாமக, தேமுதிக, என்.ஆர்.காங்கிரஸ், புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கூட்டணியில் தமாகா இன்று இணையும்  என எதிர்பார்க்கப்படுகிறது.

admk allaince candidate list ready
இந்த கூட்டணியில் பாஜக 5, பாமக 7, தேமுதிக 4. புதிய நீதி கட்சி 1, புதிய தமிழகம் 1, என்.ஆர்.காங்கிரஸ் 1, தமாகா 1 மற்றும் மீதமுள்ள 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது. இந்நிலையில் எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறித்த உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது.
 admk allaince candidate list ready
அதன்படி வட சென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, பொள்ளாச்சி, திண்டுக்கல், கரூர், பெரம்பலூர் சிதம்பரம், நாகை, தஞ்சாவூர். மதுரை, தேனி, விருதுநக்ர், திருநெல்வேலி  ஆகிய 20 தொகுதிகளில் அதிமுக போட்டியிட உள்ளது.

admk allaince candidate list ready

மத்திய சென்னை, )ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம்இ தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கடலூர் ஆணிக 7 தொகுதிகளில் பாமக போட்டியிட உள்ளது.
கோவை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 5 தொகுதிளில் பாஜக போட்டியிட உள்ளது.

கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருச்சி திருவள்ளூர் ஆகிய 4 தொகுதிகளில் தேமுதிகவும், மணிலாடுதுறையில் தமாகவும், தென்காசியில் புதிய தமிழகமும், வேலூரில் புதிய நீதி கட்சியும் போட்டியிட உள்ளன.

admk allaince candidate list ready

என்.ஆர்.காங்கிரஸ் கட்சி புதுச்சேரி தொகுதியில் களமிறங்க உள்ளது. அதே நேரத்தில் கடைசி நேரத்தில் அதாவது இறுதிப் பட்டியல் வெளியிடம் முன்வு இந்தப் பட்டியலில் ஒரு சில மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பர்க்கப்படுகிறது.

இந்தப்பட்டியலை இன்று மாலை அல்லது நாளை காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிடுவார் என தெரிகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios