Asianet News TamilAsianet News Tamil

அபி நந்தனின் படங்களை தேர்தல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது... பி.ஜே.பிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை...


‘தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் ராணுவ தலைமை அதிகாரிகள் அல்லது வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.

abhinandan photos for election campaign
Author
Delhi, First Published Mar 10, 2019, 10:21 AM IST

‘தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் ராணுவ தலைமை அதிகாரிகள் அல்லது வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பிஜேபியினர் ராணுவ வீரர் அபிநந்தன் படங்களை பிஜேபியினர் அதிக அளவில் பயன்படுத்தியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.abhinandan photos for election campaign

தேர்தல் பிரச்சாரத்துக்காக ராணுவ வீரர்களின் படத்தையோ, ராணுவ உடைகளையோ அரசியல் கட்சிகள் பயன்படுத்த இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதி மறுக்க வேண்டுமென முன்னாள் கடற்படை தலைமை அதிகாரி எல்.ராம்தாஸ் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு நேற்று (மார்ச் 9) கடிதம் அனுப்பியிருந்தார். இந்த நிலையில் தேர்தல் பரப்புரை விளம்பரங்களில் ராணுவ வீரர்களின் படத்தைப் பயன்படுத்தக் கூடாது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக 2013ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் தேதி போடப்பட்ட உத்தரவை தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பொதுச் செயலாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் மீண்டும் நேற்று (மார்ச் 9) பகிர்ந்துள்ளது. அதில், ‘தேர்தல் பிரச்சாரங்கள், விளம்பரங்கள் மற்றும் பரப்புரைகளில் தேர்தல் கட்சிகள் ராணுவ தலைமை அதிகாரிகள் அல்லது வீரர்களின் படங்கள் மற்றும் ராணுவ விழாக்களின் படங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தக் கூடாது. இதை அனைத்துக் கட்சியினரும், அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் பின்பற்ற வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது.abhinandan photos for election campaign

மத்திய அரசின் பதவிக்காலம் வரும் ஜூன் 3ஆம் தேதி முடிவடைவதால் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்காகத் தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை  நடத்தி வருவதோடு, பல முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது. இதை தொடர்ந்து தேர்தலுக்கான தேதி இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், தேசிய, மாநில கட்சிகளின் தலைவர்கள், பொதுச்செயலாளர்களுக்குத் தேர்தல் ஆணையம் கடிதம் ஒன்றை அனுப்பியது. அதில், ராணுவ உயரதிகாரிகள், ராணுவ விழாக்கள் குறித்த படங்களை எந்த வகையிலும் பயன்படுத்தக்கூடாது என நிர்வாகிகள், வேட்பாளர்களுக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அறிவுறுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பா.ஜ.க சார்பில் நடைபெற்ற இருசக்கர வாகனப் பேரணியில்  டெல்லி பா.ஜ.க தலைவருமான மனோஜ் திவாரி, ராணுவ வீரர் போல உடையணிந்து பங்கேற்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியது குறிப்பிடத்தக்கது.abhinandan photos for election campaign

பாகிஸ்தானில் பிடிபட்டு இந்தியா திரும்பிய விமானப் படை வீரர் அபிநந்தனின் புகைப்படங்களை அண்மையில் ஆம் ஆத்மி மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் விளம்பரப் பதாகைகளில் பயன்படுத்திய சம்பவம் நிகழ்ந்தது. இதுபோன்ற செயல்கள் தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக உள்ளதால், இத்தகைய செயல்கள் தேர்தல் சமயத்தில் அதிகரித்துவிடாமல் இருக்கும் வண்ணம் இந்த உத்தரவைத் தேர்தல் ஆணையம் மீண்டும் அனைத்துக் கட்சிகளுக்கும் அனுப்பியுள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios