Asianet News TamilAsianet News Tamil

நடிகர் ரஜினிகாந்த் - துக்ளக் ஆசிரியர் சந்திப்பு! 

Aauditor Gurumurthy meets Actor Rajinikanth at-chennai.html
Aauditor Gurumurthy meets Actor Rajinikanth at-chennai.html
Author
First Published Apr 23, 2018, 3:15 PM IST


நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பு வெளியிட்டிருந்தாலும், இன்னும் தனது கட்சி பற்றியும் கொள்கை பற்றியும் எந்தவித அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. ரஜினி மக்கள் மன்றம் என்ற அமைப்பை ஆரம்பித்தார். அந்த அமைப்பில் அவரது ரசிகர்கள் அதிகமாக சேர்ந்தனர்.ரஜினி மக்கள் மன்றத்தில் ஆர்வமுள்வர்கள் தங்கடிள உறுப்பினராக சேர்த்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ரஜினிகாந்த், இமயமலை சென்று வந்தார். அப்போது, அவரிடம் அரசியல் தொடர்பான கேள்வி எழுப்பியபோது, தான் இன்னும் முழுநேர அரசியல்வாதியாக மாறவில்லை என்று கூறினார். காவிரி விவகாரத்தில், ஐபிஎல் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்பட்டபோது, போராட்டக்காரர்களை காவலர்கள் தாக்கினர். இயக்குநர் வெற்றி மாறனுக்கு அடி விழுந்தது. இதை அடுத்து போலீஸ்காரர்களை போராட்டக்காரர்கள் தாக்கினர்.

காவல் துறையினரை சிலர் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த், காவல் துறையினருக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல் உச்சகட்ட வன்முறை என்று கூறியிருந்தார். இதனால் அவருக்கு எதிராக பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த், சிகிச்சைக்காக இன்று அமெரிக்கா செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்று இரவு சென்னையில் இருந்து கிளம்பு ரஜினி, அமெரிக்காவில் 10 நாட்கள் தங்கி சிக்சை பெறுகிறார் என்று தெரிகிறது.

இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் துக்ளக் ஆசிரியரும் ஆடிட்டருமான குருமூர்த்தி சந்திப்பு நடைபெற்றது. நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சியை தொடங்க உள்ள நிலையில் குருமூர்த்தி சந்தித்துள்ளார். அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது முதல், ரஜினிகாந்தை பாஜகவின் பிம்பம் என்று அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வருகிறது. இந்த நிலையில், ரஜினி - குருமூர்த்தி சந்திப்பு நடைபெற்றது.

Follow Us:
Download App:
  • android
  • ios